
சோயா பீன்ஸ் - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
துருவிய கேரட் - 3 டீஸ்பூன்
மிளகு தூள் - கால் டீஸ்பூன்
சாட் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோயா பீன்ஸை 4 மணிநேரம் ஊறவைத்து பின்னர் வேக வைத்து கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோயா பீன்ஸை போட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் மிளகு தூள், சாட் மசாலா தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சத்தான சுவையான சோயா பீன்ஸ் சாலட் ரெடி.