search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    புளி சட்னி
    X
    புளி சட்னி

    10 நிமிடத்தில் செய்யலாம் புளி சட்னி

    கல்லீரல் நச்சுத்தன்மையை போக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க புளி ஒரு சிறந்த தேர்வு. ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்புகளை கல்லீரலில் இருந்து வெளியேற்றவும் இது உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 2,
    உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி,
    பெருங்காயம், உப்பு - தேவைக்கு,
    காய்ந்த மிளகாய் - 4,
    தேங்காய் - 5 பல்,
    புளி - சிறு எலுமிச்சை அளவு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வெங்காயம், தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தை போட்டு வறுத்து ஆறவைக்கவும்.  

    மிக்சியில் முதலில் தேங்காய், காய்ந்த மிளகாயை போட்டு அரைக்கவும்.

    பிறகு வெங்காயம், புளி, உப்பு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.

    கடைசியில் உளுத்தம்பருப்பை போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான புளி சட்னி ரெடி.
    Next Story
    ×