என் மலர்

  சமையல்

  கோதுமை மாவு கீரை அடை
  X
  கோதுமை மாவு கீரை அடை

  கோதுமை மாவு கீரை அடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்துக்கள் நிறைந்த கோதுமை மாவில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று கோதுமை மாவில் கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  கோதுமைமாவு - அரை கப்
  பெ.வெங்காயம் - 2
  பச்சை மிளகாய் - 4
  கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
  நறுக்கிய கீரை - 1 கப்
  சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

  அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், கீரை, கொத்தமல்லி தழை, சீரகத் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

  தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் தடவி மாவை சற்று கனமாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

  ருசியான கோதுமை மாவு கீரை அடை தயார்.
  Next Story
  ×