search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுரைக்காய் பகாளாபாத்
    X
    சுரைக்காய் பகாளாபாத்

    நீர் சத்து நிறைந்த சுரைக்காய் பகாளாபாத்

    டயட்டில் இருப்பவர்கள், அரிசி சாதத்தை குறைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதனை தயிர் சாதத்துக்கு பதில் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் துருவியது - 1 கப்
    தயிர் - 1 1/2 கப்
    பச்சை திராட்சை - 1/2 கப்
    மாதுளை முத்துகள் - 1/2 கப்

    தாளிக்க:

    கடுகு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    பச்சைமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையானது

    சுரைக்காய் பகாளாபாத்

    செய்முறை:


    இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துருவிய சுரைக்காயை அடுப்பில் வாணலியில் தண்ணீர் சிறிது தெளித்து வேகவைத்து கொள்ளவும்,.. ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.

    ஒரு பாத்திரத்தில் தயிருடன் வேகவைத்த சுரைக்காய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

    அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
    தாளித்து  சுரைக்காய் கலவையில் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சுரைக்காய் பகாளாபாத் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×