search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தர்பூசணி வெள்ளரி பன்னீர் சாலட்
    X
    தர்பூசணி வெள்ளரி பன்னீர் சாலட்

    தர்பூசணி வெள்ளரி பன்னீர் சாலட்

    90 சதவிதம் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி ஆகிய பழங்களை கொண்டு சுவையான எளிதில் செய்ய கூடிய சாலட் தயாரித்து பாருங்கள்.
    தேவையான பொருட்கள்

    தர்பூசணி- 100 கிராம்
    வெள்ளரி - 100 கிராம்
    புதினா - சிறிதளவு
    பன்னீர் - 50 கிராம்
    தேன்/ எலுமிச்சை சாறு - விருப்பத்திற்கு ஏற்ப

    தர்பூசணி வெள்ளரி பன்னீர் சாலட்

    செய்முறை

    பழங்களை கழுவி, தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    சுடு தண்ணீரில் பன்னீரை 5 நிமிடங்கள் போட்டு வைத்த பின், நறுக்க வேண்டும்

    ஒரு பாத்திரத்தில் பழங்களையும் பன்னீரையும் சேர்த்து கலக்க வேண்டும்.

    அடுத்து அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.

    கடைசியாக புதினா சேர்த்து, பரிமாறவும்

    சுவையான தர்பூசணி வெள்ளரி பன்னீர் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×