search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கற்றாழை கோதுமை அடை
    X
    கற்றாழை கோதுமை அடை

    சத்து நிறைந்த கற்றாழை கோதுமை அடை

    சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது. இந்த இந்த கற்றாழையை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை அவல் - 250 கிராம்
    கற்றாழை நீட்டம்  - 2
    ஏலக்காய் - 1 டீஸ்பூன்
    வெல்லம் - 1 கப்
    தேங்காய்த் துருவல் - 1 கப்
    எண்ணெய் - சிறிதளவு

    கற்றாழை கோதுமை அடை

    செய்முறை:

    கோதுமை அவல் இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    கற்றாழையை தோலை நீக்கி சுத்தம் செய்தபின் அதில் உள்ள கற்றாழை ஜெல்லியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

    கோதுமை அவல், வெல்லம், கற்றாழை ஜெல்லி மூன்றையும் மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும் மாவு பதத்தில்.

    அரைத்த மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் தவாவை வைத்து அந்த மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

    சூடான சுவையான கற்றாழை அடை தாயார்.

    இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×