search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மிளகு சீரக ரொட்டி
    X
    மிளகு சீரக ரொட்டி

    இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி

    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ரொட்டி செய்யும் போது அதில் மிளகு, சீரகம் சேர்த்து செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    மிளகு சீரக ரொட்டி

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும்.

    பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

    சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    ருசியான மிளகு சீரக ரொட்டி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×