search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோர்மா ரொட்டி
    X
    கோர்மா ரொட்டி

    ராஜஸ்தானி ஸ்பெஷல் கோர்மா ரொட்டி

    ராஜஸ்தானில் இந்த கோர்மா ரொட்டி மிகவும் பிரபலம். இன்று இந்த ரொட்டியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஓமம் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 1 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    கோர்மா ரொட்டி

    செய்முறை

    பாசி பருப்பை கொரகொரப்பாக மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    பின் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

    ஊறிய பாசிப்பருப்பை நன்கு வடிகட்டி, கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ஓமம், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்.

    30 நிமிடங்களுக்கு பிறகு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தியாக தேய்த்து எடுக்கவும்.

    பின்னர் தோசை கல்லில் எண்ணெய் தெளித்து தேய்த்த ரொட்டியை போட்டு வேக விடவும்.

    ரொட்டியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு இரு புறமும் சிறிது பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான ராஜஸ்தானி கோர்மா ரொட்டி ரெடி.

    சூடாக ரொட்டிகளை ஊறுகாய் உடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×