search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தனியா சட்னி
    X
    தனியா சட்னி

    உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேருவதை தடுக்கும் சட்னி

    தனியா கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை உடலில் சேராமல் தடுக்கிறது. இன்று தனியா சேர்த்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள் :

    தனியா - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 10
    பூண்டு - 2 பல்
    புளி - சிறிதளவு
    கடுகு - 1/4 ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1/4 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை -   தேவையான அளவு

    தனியா சட்னி

    செய்முறை :

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் தனியா, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் தனியா சட்னி தயார்.

    அருமையான தனியா சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×