search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அரிசி மாவு களி
    X
    அரிசி மாவு களி

    சத்தான அரிசி மாவு களி

    காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் அரிசி மாவில் களி செய்து சாப்பிடலாம். இன்று இந்த களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    அரிசி மாவு - 1 கப்
    மோர் - ½ கப்
    மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - சிறிதளவு
    இந்துப்பு - சிறிதளவு

    தாளிக்க  :


    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - சிறிதளவு

    அரிசி மாவு களி

    செய்முறை :

    அரிசி மாவை மோருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.

    வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை இதில் போட்டு கிளறவும். மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும். சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி விடலாம்.

    சுவையான அரிசி மாவு களி ரெடி.

    இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். பெரியவர்களுக்காக செய்தால் மோர் மிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×