search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    முட்டையின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்..
    X

    முட்டையின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்..

    • உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்தால் எடை குறையும்.
    • உடல் எடையைக் குறைப்பதில் புரோட்டின் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    போதிய உடற்பயிற்சி இல்லாததும், கலோரிகள் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுவதும் தான் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணங்கள். உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்தால் எடை குறையும். கொழுப்பைக் குறைக்க, ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான முயற்சியில் ஈடுபடுவார்கள்.

    உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க முடியும். அந்தவகையில், உடல் எடையைக் குறைப்பதில் புரோட்டின் எனப்படும் புரதம் உள்ள உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடல் வளர்ச்சிக்கு புரதம் முக்கிய மானது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, பக்கவாதம் வராமல் தடுக்கிறது. புரதம் நிறைந்த எளிய உணவு கோழி முட்டை. முட்டையின் மூலம் உடல் எடையைக் குறைப்பது குறித்து இங்கே பார்ப்போம். இதைத் தொடங்கும் முன்பு மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.

    சாப்பிடும் முறை:

    தினமும் காலை உணவாக வேக வைத்த முட்டைகள் 2, ஸ்டார்ச் குறைவான வேக வைத்த காய்கறிகள் 1 கப், கார்போஹைட்ரேட் குறைவான பழங்கள் 1 கப் சாப்பிட வேண்டும். மதியம் மற்றும் இரவு உணவாக கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள வேக வைத்த காய்கறிகள் 1 கப், வேக வைத்த முட்டை 1 சாப்பிட வேண்டும்.

    இந்த உணவு முறையைப் பின்பற்றும்போது எளிய உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன் தரும். 2 வாரங்களுக்கு மட்டுமே இதனைப் பின்பற்ற வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு வழக்கமான உணவுகளை சாப்பிடலாம். அளவாக உண்ண வேண்டியது அவசியம். பிறகு மீண்டும் அடுத்த 2 வாரங்களுக்கு 'முட்டை டயட்' பின்பற்றலாம். புரதம் நிறைந்த உணவுகள் செரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்.

    பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுவதால், அடிக்கடி பசி எடுக்காது. இந்த உணவு முறையை மேற்கொள்ளும்போது அளவாகச் சாப்பிடுதல், நொறுக்குத் தீனி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல், இனிப்புகளை அதிகம் உண்ணாமல் இருத்தல், பட்டினி கிடப்பதைத் தவிர்த்தல், சரியான நேரத்துக்கு உண்ணுதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முட்டை, இறைச்சி, பீன்ஸ், நட்ஸ், யோகர்ட், பருப்பு வகைகள், பட்டாணி, தானியங்கள், மீன், சோயா பீன்ஸ், பால் பொருட்கள், பழங்கள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அனைவரும் சாப்பிடலாம்.

    Next Story
    ×