search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீண்டகால நீரிழிவு நோயினால் வரும் குதிகால் வலியும்... சித்த வைத்தியமும்...
    X

    நீண்டகால நீரிழிவு நோயினால் வரும் குதிகால் வலியும்... சித்த வைத்தியமும்...

    • ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும்.
    • காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும்.

    நீண்டகால நீரிழிவு நோயினால் கால்களிலும், பாதங்களிலும் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதனால் பாதங்கள் மதமதப்பாகவும், கால் தசைகள் வலியாகவும், சோர்வாகவும் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) ஆவாரைப் பூ குடிநீர் பொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    2) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. அளவு காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) மதுமேக சூரணம் 1 கிராம் அல்லது மதுமேக சூரண மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும்.

    4) கால் மதமதப்பு, தசை வலி நீங்க: அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை காலை, மதியம், இரவு மூன்று வேளை வெந்நீரில் எடுக்க வேண்டும். வாத கேசரி தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை கால்களிலும் பாதங்களிலும் நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகச் சிறந்தது.

    5) ரத்த அழுத்தம் குறைய உணவில் உப்பு, ஊறுகாய் இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். வெண்தாமரை இதழ் சூரணம், அல்லது அசைச் சூரணம் 1 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை வெந்நீரில் சாப்பிட ரத்த அழுத்தம் குறையும்.

    ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும். காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக, காலையில் கண் விழிக்கும்போது பாதங்களில் வலியை உணர்பவர்கள் வீட்டுக்குள்ளேயும் செருப்பு அணிந்து நடப்பதே பாதுகாப்பானது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    Next Story
    ×