இதயம் முதல் புற்றுநோய் வரை - புரோக்கோலியில் இவ்வளவு சத்துகளா?

இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது.புரோக்கோலி தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
இதயம் முதல் புற்றுநோய் வரை - புரோக்கோலியில் இவ்வளவு சத்துகளா?
Published on

பூங்கொத்து வடிவில் காட்சியளிக்கும் புரோக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறியப்படுகிறது.

இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது. தோற்றத்தில் காலிபிளவரை ஒத்திருக்கும். பூவாக மலரும் பகுதி பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். புரோக்கோலி குளிர் தட்பவெப்பநிலையில் வளரக்கூடியது. அதனால் கோடை காலத்தில் வளராது. இதை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கும். இதில் வைட்டமின்கள் சி. கே. பி9 மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com