என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
துரித உணவை மறப்போம்... பழங்களை கொண்டாடுவோம்
Byமாலை மலர்22 Nov 2021 12:44 PM IST (Updated: 22 Nov 2021 12:44 PM IST)
தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தொழிலில் வெற்றி பெறுவதற்கு மனிதனின் உடல் ஆரோக்கியம் என்பது தான் சக்கரம் போன்றது. சக்கரம் சரியாக இல்லையென்றால் வண்டி ஓடாது என்பது ஏற்ப, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டால் தொழிலிலும் கவனம் செலுத்த முடியாது. அதிலும் தற்போது பெருந்தொற்று காலம் என்பதால், உடல் ஆராக்கியத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
துரிதமாக வளரும் இந்த உலகில் துரித உணவான பீட்சா, பர்கர் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து கொரோனா என்னும் கொடிய அரக்கனின் பிடிக்குள் அகப்பட்டு வருகிறோம்.
உணவு, மருந்தாக செயல்பட்டு, ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் பழங்களை நம்மில் பலர் மறந்து விட்டனர். அதனால் தான் நம் ‘பழ’ந்தமிழர்கள் பழங்களை கொண்டாடினார்கள்.
ஆனால், பழங்களை தினசரி உணவில் எடுத்து கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். அதனால் தான் தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பல்வறேு பழங்களின் சத்துக்கள் என்ன என்பது குறித்த ஒவ்வொரு தொகுப்பாக பார்க்கலாம் வாங்க...
பழங்களில் பொதுவாக அதிக அளவில் நார்ச்சத்தும், மிக குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்க விடாமல் இவை தடுக்கிறது.
கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க கிர்ணி, தர்ப்பூசணி என்று அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி தருகிறது இயற்கை. இவை மட்டுமின்றி தினமும் தொடர்ந்து பழவகைகளை சாப்பிடுவதே சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மாம்பழம்
முதலில் முக்கனிகளின் முதன்மையான கனியாக இருக்கும் பாம்பழம் குறித்து பார்ப்போம்:-
மாம்பழம், பழங்கின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவும் கனி இதுவாகும். இதில் வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியன நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் பிளவனாய்ட், ஆன்டிஆக்சிடன்ட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் மாம்பழத்தில், 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அதேபோன்று வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.
மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
பலா
முக்கனிகளில் 2-வது இடம் வகிக்கும் கனி பலா. நமது கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு பெயர்பற்றது இந்த கனி. வைட்டமின்கள், நார்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த பழமாகும்.
100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட பிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பலாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின்,, போலிக் அமிலம் போன்றவை அதிக அளவில் உள்ளன. மேலும் இயற்கையான முறையில் கிடைக்கும் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.
தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம். பலாவில் வோ், இலை, காய் பழம் என அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்தவை ஆகும்.
வாழைப்பழம்
முக்கனிகளில் 3-வதாக அங்கம் வகிக்கும் கனி வாழைப்பழம், ஆண்டு முழுவதும் கிடைக்ககூடியதாகும். வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த கனி.
வாழையில் உள்ள பரக்டோஸ் போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான உடனடி எனர்ஜி கிடைக்கும். 100 கிராம் பழம் 90 கலோரியை இது தருகிறது. அதேபோல் 100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் இருப்பதால் இதய துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.
பொட்டாசியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதயத் துடிப்பைப் பாதிக்கச் செய்யும். எனவே, இதை நினைவில் கொண்டு
இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளை பொறுத்தவரை உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள வைட்டமின் பி 6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். இதயப் ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
தாது உப்புக்களைப் பொறுத்தவரையில், தாமிரம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

Next Story
×