search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
    X
    டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

    டெங்கு காய்ச்சல்: அறிகுறிகளும்.. விழிப்புணர்வும்..

    டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
    கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வராத நிலையில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. உடல் நடுக்கம், காய்ச்சல், பசியின்மை, கடுமையான உடல்வலி, தலைவலி உள்ளிட்டவை டெங்குவின் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

    பப்பாளி இலை சாறு: பிளேட்லெட் எனப்படும் ரத்தத்தட்டுகள், சிறிய செல்கள் வடிவிலானவை. உடலில் சிறிய காயம் ஏற்பட்டால் உடனே ரத்தத்தை உறைய வைப்பதற்கு இவை அவசியம் தேவை. அதிகப்படியான ரத்த இழப்பை தடுப்பதில் பிளேட்லெட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பப்பாளி இலை சாறு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. அதனால் பப்பாளி இலைகளை சாறு பிழிந்து பருகி வரலாம்.

    வைட்டமின் சி: இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்ற வைட்டமின் சி நிரம்பிய உணவு பொருட்களை சாப்பிட்டுவது நல்லது.

    துத்தநாகம்: இதுவும் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும். முழு தானியங்கள், பால் பொருட்கள், செர்ரி பழங்கள், வேகவைத்த பீன்ஸ், கொண்டைக்கடலை, முந்திரி, பாதாம், சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் துத்தநாகம் அதிகம் நிரம்பியுள்ளது. அவற்றை சாப்பிடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஜிங்க் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

    போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12: இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவை.

    இரும்பு: இரும்புச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். நோயெதிர்ப்பு செல்கள் பெருக்கம் அடைவதற்கு இரும்பு அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகலாம். மது அருந்தக்கூடாது. எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், காபின், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    Next Story
    ×