search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்
    X
    எடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்

    எடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்

    எடை குறைப்பு என்பது யாருக்குமே எளிதானது அல்ல. இளைப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஆனாலும் சிலவற்றினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    எடை குறைப்பு என்பது யாருக்குமே எளிதானது அல்ல. விதவிதமான உணவினை பல ஊர்கள், பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்த இடத்தில் இருந்தே எளிதாய் பெறும் வசதியினை பெற்று விட்டோம். ஆக எடை எளிதல் கூடி விடுகின்றது. இளைப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஆனாலும் சிலவற்றினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * பலரும் இரவில் வெகுநேரம் கழித்தே தூங்குகின்றோம். ஆய்வுகள் கூறுவது வெகு நேரம் கழித்து தூங்குபவர்களின் இயற்கை முறை பாதிக்கப்படுவதால் அவர்கள் உடலில் கொழுப்பு சத்து கூடுகின்றது, எடையும் கூடுகின்றது என்பதாகும்.

    * எனவே இரவில் 7-8 மணி நேரம் நல்ல உறக்கம் அவசியம்.

    * அதிக சூடு தூங்கும் அறையில் கூடாது. குளிர்ந்த சூழலில் தூங்குவதே எடை குறைய உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.

    * மது பழக்கம் வேண்டாம்.

    * இரவு உணவு சிறியதாக இருக்க வேண்டும்.

    * படுக்கும் அறையில் உங்கள் செல்போன், மடி கணினி என அனைத்தையும் நீக்கி விடுங்கள். இவைகளிலிருந்து வெளிவரும் ஒளி அதிக பசியினை தூண்டி இன்சுலின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படுத்துகின்றது.

    * அடிக்கடி ஒரு வேளை உண்ணாது இருங்கள்.

    * இந்த சிறு சிறு கவனிப்பும் ஆரோக்கியமாய் நாம் எடை குறைய உதவும்.
    Next Story
    ×