என் மலர்
குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு வெற்றி வரை பயிற்சி அவசியம்...
- சறுக்கல் என்பது கவனக்குறைவால் ஏற்படுகிறது.
- தோல்வியால் வெட்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
எதிர்ப்பு, சவால், இழப்புகளை எதிர்கொண்டு வாழக்கூடிய தைரியத்தை தங்களது குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் போதிக்க வேண்டும். வெற்றி பெறும் வரை பயிற்சி அளிக்க வேண்டும்.
அறியாமை, பயம், பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் ஆகியவை தான் ஒரு மனிதனை தற்கொலைக்கு தூண்டுகிறது. இது முட்டாள் தனமானது. தற்கொலை ஒரு கோழைத்தனமானது. எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் தோல்வி அடைந்தாலும் முயற்சி செய், உன்னால் சாதிக்க முடியும் என்று பெற்றோர் உற்சாகப்படுத்த வேண்டும். எனது தோல்வி ஒரு சறுக்கல்; அது வீழ்ச்சி அல்ல என்றார் ஆபிரகாம் லிங்கன். சறுக்கல் என்பது கவனக்குறைவால் ஏற்படுகிறது. தோல்வியால் வெட்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அதில் இருந்து மீண்டு, வெற்றி என்னும் இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
எந்த ஒரு பிரச்சனையையும் தங்களிடம் பேச வேண்டும்.பிரச்சனைகள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும் என்றும் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.






