
இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர்களான பெர்னார்ட் ரிம்லாண்ட், ரூத் சல்லிவன் ஆகியோர் கடந்த 1965-ம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு பற்றிய ஆய்வுகளுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கினார்கள்.
கடந்த 2008-ம் ஆண்டில்தான் ஐ.நா சபையால், ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.