search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வழிகள்
    X
    குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வழிகள்

    குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த 7 வழிகள்

    புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் புதுப்புது உறுதிமொழிகள் எடுப்பதுபோல, ‘இந்த வருஷம் கண்டிப்பாக இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
    குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த உதவும் 7 வழிகள் இதோ....

    நேரம் ஒதுக்குங்கள்

    நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்!

    புத்தகம் வைத்திருங்கள்

    கையோடு ஒட்டிபிறந்த ரெட்டை பிறவியாய் இருக்கும் மொபைல் போன்களுடன் ஒரு புத்தகத்தையும் வைத்திருங்கள். எப்போதும் கையில் புத்தகம் இருப்பது காத்திருப்பு நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க பயன்படும். படிக்க நேரம், இடம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.

    பட்டியல் போடுங்கள்

    என்னென்ன புத்தங்கங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் வைத்திருப்பது நல்லது. அதில் எந்த புத்தகங்கள் உங்களிடம் உள்ளன என குறித்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன் அதனை பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள், அல்லது படித்து முடித்ததற்கு ஏதாவது அடையாளம் வைத்துக்கொள்ளுங்கள். பட்டியலில் புத்தகங்கள் படித்து முடித்து எண்ணிக்கை குறைய குறைய புதிய புத்தகங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இடத்தை தேடுங்கள்

    நாம் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கிறோம் என்பதை போலவே எந்த இடத்தில் இருந்து படிக்கிறோம் என்பதும் முக்கியம்! உங்களை சுற்றி எந்த இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் இரைச்சல் மிகுந்த இடத்தில் அமர்ந்து படிப்பது வீண். அதனால் அமைதியான இடமாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

    கதை சொல்லுங்கள்

    வீட்டில் சிறுவர்-சிறுமியர் இருந்தால் இரவு நேரங்களில், அவர்கள் தூங்கப் போகும்முன் ஏதாவது ஒரு சிறுவர் புத்தகத்தை படித்து காட்ட பழக்குங்கள். இதனால் சிறு வயதிலேயே வாசிப்பின் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு வரும், நமக்கும் படித்தது போல் இருக்கும்.

    பழைய புத்தகங்களை நாடுங்கள்!

    புது புத்தகங்கள் தான் படிக்க வேண்டும் என்பது இல்லை. நமக்காகவே உள்ளன பழைய புத்தக நிலையங்கள். அருகிலுள்ள நூலகங்களை பயன்படுத்துவது இன்னும் நலம். புத்தகங்களை குறிப் பிட்ட காலத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியத்தால் நிச்சயம் படித்து விடுவீர்கள்.

    உறுதிமொழி எடுங்கள்

    புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் புதுப்புது உறுதிமொழிகள் எடுப்பதுபோல, ‘இந்த வருஷம் கண்டிப்பாக இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உறுதிமொழியை பாதியில் விட்டுவிடாமல் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.
    Next Story
    ×