search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?
    X
    குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

    குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

    குழந்தைகளிடம் அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
    10 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளின் மனதில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தால்தான் அவர்கள் உங்கள் அறிவுரையை கேட்டு நல்ல முறையில் வளர்வார்கள். எனவே பெற்றவர்களை பற்றி குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

    5 முதல் 10 வயதுக்குட்பபட்ட குழந்தைகளிடம் நீங்கள் நேரடியாக கேட்டால் தயக்கம் பயம் காரணமாக வெளிப்படையாக பேச மாட்டார்கள். எனவே நண்பர் உறவினர் மூலம் குழந்தைகளிடம் இயல்பாக பேசி உங்களை பற்றி விசாரிக்க சொல்லுங்கள்.

    அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மனதில் உங்களை பற்றி உருவாகியிருக்கும் மதிப்பீடுகள் சரியா என்பதை அலசி ஆராயுங்கள்.

    உங்களுக்காக நான் இவ்வளவு செலவு செய்கிறேன், தியாகங்களை செய்கிறேன் ஆனாலும் என்மீது பாசம் இல்லையே என்று கோபப்படாதீர்கள்.நீங்கள் அருகே இல்லாத குறையை நீங்கள் வாங்கித்தரும் பொருட்கள் ஈடுகட்டிவிடாது என்பதை உணருங்கள்.

    குழந்தைகளின் மதிப்பீடு சரியாக இருந்தால் கட்டாயம் உங்கள் நடவடிக்கைகளை மாற்றி கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்ததுபோல் நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் பேசுங்கள். விளையாடுங்கள். கதை சொல்லுங்கள். இப்படிப்பட்டஅணுகுமுறைதான் உங்களிடம் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும். எப்போதேனும் நீங்கள் யார் மீதோ கோபமாக இருக்கும் நேரத்தில் உங்கள் குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெரிதாக தோன்றி அவர்களை தண்டிக்க நேரிடலாம். அதுபோன்ற சமயங்களில் உடனடியாக அவர்களை அழைத்து சமாதானப்படுத்துங்கள். பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்.

    வீட்டில் இருக்காமல் நீங்கள் வேலைக்கு செல்வது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். வேலைக்கு போக வேண்டிய குடும்பச்சூழலை அவர்களிடம் சொல்லி புரிந்து கொள்ள செய்வது அவசியம். வீடியோ கேம் விளையாடவோ, சத்து இல்லாத உணவுப்பொருட்களை வாங்கவோ கூடாது என்று நீங்கள் காட்டும் கண்டிப்பு கூட அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். குழந்தைகளின் தவறான கண்ணோட்டததை மாற்றுங்கள். அவர்களின் நன்மைக்காகத்தான் கண்டிப்பு காட்டுகிறீர்கள் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். ஒரு நேரம் கண்டித்தாலும் மற்ற நேரத்தில் நட்போடு பழகுங்கள்.
    Next Story
    ×