search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களின் நினைவாற்றலுக்கு தேவை நல்ல தூக்கம்
    X
    மாணவர்களின் நினைவாற்றலுக்கு தேவை நல்ல தூக்கம்

    மாணவர்களின் நினைவாற்றலுக்கு தேவை நல்ல தூக்கம்

    நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.
    நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வு சமயத்தில் சில வகை உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நினைவுத்திறனையும் மேம்படுத்தும்.

    மாணவர்கள் தேர்வு காலங்களில் நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. அதற்கு மாற்றாக ஆரோக்கியமான சிற்றுண்டி வகைளை சாப்பிட வேண்டும். பாதாம், முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு வருவது உடல் நிலையிலும், மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியன்ஸ் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை.

    செரிமானத்திற்கு மட்டுமின்றி நினைவாற்றல் திறனுக்கும், மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் தேன் உதவும். மூளையில் ஆக்ஸிஜனேற்ற நிலையை மேம்படுத்துவதற்கு தேன் உதவுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேனில் இருக்கும் பாலிபினால்கள், நரம்பு மண்டலத்தை பலப் படுத்தும் தன்மை கொண்டது.

    பூசணி விதைகள் மூளை செல்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தும்தன்மை கொண்டவை. அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நரம்பு மண்டலத்திற்கும், மூளையின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்ப்பவை. அதிலிருக்கும் செம்பு, நரம்பு களின் செயல் திறனை அதிகரிக்கும். மெக்னீசியம் நினைவாற்றலுக்கு துணை நிற்கும்.

    ஆரோக்கிய பானமாக கருதப்படும் கிரீன் டீயில் காபின் அதிகம் கலந்திருக்கிறது. மூளையில் ரத்தம் தடையின்றி செயல்பட அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் துணைபுரிகிறது. தேவையற்ற பதற்றம் ஏற்படுவதையும் அது தடுக்கும்.

    நினைவாற்றலுக்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டும். நன்றாக தூங்குவதும் அவசியமானது.
    Next Story
    ×