search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடும்ப உறவுகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்
    X
    குடும்ப உறவுகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்

    குடும்ப உறவுகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்

    தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
    முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கத்தில் இருந்தது. ஆனால் இன்று பொருளாதார சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் தனிக்குடித்தன முறை தவிர்க்க முடியாததாகி விட்டது.

    கூட்டுக்குடும்ப முறையில் குழந்தைகளை பராமரிக்கவும், நீதிக்கதைகளை கூறி நல்வழிப்படுத்தவும் தாத்தா-பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவு முறைகள் இருந்தன.

    தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர். தனிக்குடித்தனத்தில் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோரை மட்டுமே முழுவதும் சார்ந்துள்ளது. தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மன அழுத்த நோய்கோ, தவறான பழக்க வழக்கங்களுக்கோ அடிமையாகும் வாய்ப்பு அதிகம். இதனால் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்க்கும் பெரும் பொறுப்பு தாய்க்கு உள்ளது. அதே நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு கைக்குழந்தைகளை கவனிப்பது கஷ்டமான விஷயம்.

    வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவகத்தில் தங்களது வளர்ச்சியையும், குடும்ப பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரையிலும் சவாரி செய்து வெற்றி மங்கைகளாக வலம் வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் நேரத்தை குழந்தைகளுக்காகவும் ஒதுக்க வேண்டும். தினமும் ஒருவேளை உணவாவது அவர்களுடன் சாப்பிட வேண்டும்.

    இதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்க கூடாது. நீ சாப்பிட்ட பின் இதை செய்யவேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கட்டளையிட கூடாது. அதற்கு பதிலாக மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களை பற்றி பேசலாம். குழந்தைகள் என்ன செய்ய விரும்புகிறார்கள் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    அவர்களது குறைகளை பரிச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் பொய் செல்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை அடித்து விடக்கூடாது. உங்களிடம் உள்ள பயத்தின் காரணமாகவே குழந்தைகள் உண்மையை மறைக்க நினைக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லுவோம் அவர்கள் நல்ல தீர்வை தருவார்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.

    தாயை கண்டு பயப்படும் குழந்தைகள் உண்மையை மறைக்கவே செய்யும். மேலும் குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்க அனுமதிக்க கூடாது. அந்த நேரத்தில் நீங்கள் வேலை செய்து கொண்டு இருந்தால் குழந்தைகளுக்கு சிறிய வேலைகளை பங்கிட்டு கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடன் நீங்கள் இருக்கும் நேரம் அதிகரிக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடன் தட்டை தானே எடுத்து வைப்பது, பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து கொடுப்பது போன்ற பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    வீட்டிற்கு விருந்தினரோ, உறவினரோ வந்தால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கவனிக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து கொண்டாட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடனான உறவு மேம்படும். அதே போல் தங்களது குழந்தைகளை எந்த குழந்தைகளுடனாவது ஒப்பிட்டு குறை கூற கூடாது. இந்த செயல் உங்கள் மேல் குழந்தைகளுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். இது தாய் மற்றும் குழந்தைகள் உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.

    அதே போல் அலுவலகத்தில் அதிக நேரம் இருந்தால் வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்பதனை குழந்தைகளிடம் தெரிவித்து விடுங்கள். இது உங்களை நினைத்து குழந்தைகள் காத்து இருப்பதை தவிர்க்க உதவும். பள்ளியில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றிற்கு குழந்தைகளுடன் கட்டாயம் செல்லுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இழந்து விடாதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு தங்கள் தாய் மேலும் இருக்கும் நெருக்கம் அதிகமாகும். அதே நேரத்தில் வேலைக்கு சென்று கொண்டே குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து கொள்ளலாம்.
    Next Story
    ×