என் மலர்

  ஆரோக்கியம்

  குழந்தைகளுக்கு அம்மை வராமல் தடுக்க முடியுமா?
  X

  குழந்தைகளுக்கு அம்மை வராமல் தடுக்க முடியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மை வராமல் தடுக்க முடியுமா, வந்தால் என்ன செய்வது, தடுப்பூசிகள் இருக்கின்றனவா, என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  கத்திரி வெயிலில் வருகிற அம்மை இப்போதே குழந்தைகளுக்கு வர ஆரம்பித்துவிட்டது. அம்மை வராமல் தடுக்க முடியுமா, வந்தால் என்ன செய்வது, இதற்குத் தடுப்பூசிகள் இருக்கின்றனவா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
  வராமல் தடுக்க முடியுமா?

  சின்னம்மை எனப்படுகிற சிக்கன்பாக்ஸால் பிரச்சனை மக்கள்தொகை நெருக்கமாக இருக்கிற பகுதிகளில் வரும். ஏனென்றால் அங்கெல்லாம் சுத்தம், சுகாதாரம் குறைச்சலா இருக்கும். அதனால், உங்கள் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி, குழந்தைகளை அதிக நேரம் வெயிலில் விளையாட விடாதீர்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.

  அவர்களை வற்புறுத்தியாவது நிறைய தண்ணீர் குடிக்க வையுங்கள். தர்பூசணி மாதிரி சம்மர் சீசன் பழங்களைத் தினமும் சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகள் தினமொரு கீரைச் சாப்பிட வேண்டியது இந்த சீசனில்தான். சமையலில் நிறைய நீர் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளைப் பிள்ளைகளை குளிக்க வையுங்கள். இவற்றையெல்லாம் செய்தால், குழந்தைகளுக்குச் சின்னம்மை வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.'

  சின்னம்மை வராமல் தடுக்க தடுப்பூசி இருப்பதுபோல, வந்துவிட்டால் சரி செய்ய மாத்திரையும் இருக்கிறது. அம்மை அறிகுறி வந்த 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தால், 5 நாளில் அம்மை வந்த சுவடே தெரியாமல் அப்படியே அமுங்கி விடும். இந்த மாத்திரையைக் குழந்தைகளும் சாப்பிடலாம். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவும் கிடைக்கிறது.'

  பொதுவாகத் தட்டம்மை, பொன்னு வீங்கி போன்ற அம்மைகள் வராமல் தடுப்பதற்கு பிரைவேட் மருத்துவமனைகளில் எம்.எம்.ஆர். தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் என்றால் எம்.ஆர். தடுப்பூசி போடுகிறார்கள். ஒரு குழந்தையின் ஒன்பதாவது மாதத்திலேயே இந்தத் தடுப்பூசியைப் போடலாம். இதைத் தவிர, சிக்கன்பாக்ஸுக்கும் தடுப்பூசி இருக்கிறது. சிறு குழந்தைகள் என்றால், ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே போதும்.

  12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால், ஒரு மாதத்தில் இரண்டு டோஸ் கொடுக்க வேண்டும். வெறும் டோஸ் மட்டும் போட்டால் எதிர்ப்புசக்தி முழுமையாகக் கிடைக்காமல் சின்னம்மை வந்துவிடலாம். உங்கள் குழந்தைகளுக்கு மேலே சொன்ன தடுப்பூசிகளை போடப் போடுகிறீர்கள் என்றால், இவற்றைப் பற்றியெல்லாம் உங்கள் மருத்துவரிடம் தெளிவாக கேட்டு, பிறகு போட்டுக் கொள்ளலாம்.
  Next Story
  ×