என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று அன்னை தாராதேவி ஜெயந்தி
    X

    இன்று அன்னை தாராதேவி ஜெயந்தி

    • தாரா தேவியை வணங்கினால் குருபகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கிவிடும்.
    • உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும்.

    காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீகமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர். அதில் இரண்டாவது தேவி தாரா தேவி.

    பாற்கடலை தேவர்கள் கடைந்த பொழுது, வந்த ஆலகால விஷத்தை பரமசிவன் விழுங்க வேண்டிய நேரத்தில், அதை தொண்டையிலேயே தடுத்து நிறுத்திய தேவி தாரா தேவி. இந்த தாரா தேவியை வணங்கினால், ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கிவிடும்.

    வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம் தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும். உலக இச்சையை கத்தரிக்கும். உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும்.

    தாரா தேவியின் வரலாறு

    தாரா தேவி மேரு மலையின் மேற்கு பகுதியில் சோல்னா ஆற்றின் கரையில் பிறந்தார். சுதந்திர தந்திரத்தின் படி, தாரா தேவி கடற்கரையில் தோன்றினார். ஹயக்ரீவன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக மகா காளி தேவி நீல் வர்ணத்தை அணிந்தாள்.

    மஹாகால சம்ஹிதாவின் படி, 'தாரா தேவி' சைத்ர சுக்ல அஷ்டமி திதியில் தோன்றினார், இதன் காரணமாக இந்த தேதி தாரா-அஷ்டனி என்றும், சைத்ர சுக்ல நவமியின் இரவு தாரா-ராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

    தாரா ஜெயந்தியின் முக்கியத்துவம்

    சைத்ரா மாத நவமி திதியிலும் சுக்ல பக்ஷத்திலும் தாரா தேவியை வழிபட வேண்டும் என்ற விதி உள்ளது. தாரா தேவி மனிதனின் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்கள், இடர்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை நீக்குகிறாள். அன்னை தாராவின் ஆன்மீக பயிற்சி முழுமையான அகோரி சாதனாவாக கருதப்படுகிறது.

    தாரா ஜெயந்தி நாளில் ஒருவர் அன்னை தாராவை அனுஷ்டித்து வந்தால், அவருக்கு பிரபஞ்ச மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் கிடைக்கும். அன்னை தாரா ஜெயந்தி நாளில் வழிபவடுபவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்.

    இது தவிர தாரா ஜெயந்தி அன்று அன்னை தாராவை வழிபட்டு வந்தால் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அன்னை தாரா தேவி முக்தியை வழங்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.

    Next Story
    ×