என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 ஜூலை 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 ஜூலை 2025

    • திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
    • திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-24 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி நள்ளிரவு 1.32 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : கேட்டை மறுநாள் விடியற்காலை 4.35 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    இன்று பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகியசிங்கர் புறப்பாடு. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் திருவீதியுலா, சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-ஈகை

    சிம்மம்-ஊக்கம்

    கன்னி-மாற்றம்

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- கண்ணியம்

    மகரம்-நிறைவு

    கும்பம்-நிம்மதி

    மீனம்-உண்மை

    Next Story
    ×