என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 30 ஏப்ரல் 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 30 ஏப்ரல் 2025

    • இன்று அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-17 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை இரவு 8.41 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : ரோகிணி இரவு 8.32 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்று அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கும்பகோணம் பெரிய கடை தெருவில் 12 கருட சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு. மங்கையர்கரசி நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-நன்மை

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-களைப்பு

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- ஆர்வம்

    மகரம்-உதவி

    கும்பம்-லாபம்

    மீனம்-நன்மை

    Next Story
    ×