என் மலர்
வழிபாடு

திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம் இன்று
- பூவுலகில் 4,700 ஆண்டுகள் ஜீவித்திருந்தார்.
- தீவிர ஸ்ரீவைணவராய், இறுதி வரை திகழ்ந்தார்.
சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகே திருமழிசை என்ற ஊரில், கன காங்கி எனும் தேவலோக மாதருக்கும், பார்கவ முனிவருக்கும் தவத்தின் பலனாக அவதரித்தவர் திருமழிசையாழ்வார், பூவுலகில் 4,700 ஆண்டுகள் ஜீவித்திருந்தார். அநேக சமயங்கள் மற்றும் தத்துவ ஆராய்ச்சி மேற்கொண்ட காரணத்தினால், பல்வேறு திருநாமங்களையும் விருதுகளையும் கொண்டவர் திருமழிசைப்பிரான்.
`சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல்'
திருமழிசையார், சிவ வாக்கியர், சக்கரத்தாழ்வார், பக்திசாரர், உரையிலிடாதார், குடமூக்கிற் பகவர், கும்பகோணத்து பாகவதர், சித்தர், தத்துவமேதை, மகாநுபாவர், மெய்ஞ்ஞான செல்வர், அருட்குண பெரியார், பார்கவ முனிவரின் அருந்தவ செல்வர் என்று பல திருநாமங்கள் இவருக்கு உண்டு. சமணம், பௌத்தம், மாயாவதம் மற்றும் சைவம் பின்பற்றி, இறுதியில் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரால் திருத்திப்பணிக்கொண்ட பிறகு, தீவிர ஸ்ரீவைணவராய், இறுதி வரை திகழ்ந்தார். திருமழிசை யாழ்வாரின் அருளிச்செயல்கள்: 1. நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்) 2. திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்).






