search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் 1-ந்தேதி நடக்கிறது
    X

    கொடியேற்றப்பட்டதையும், சிறப்பு அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார்-ஆண்டாள் அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் 1-ந்தேதி நடக்கிறது

    • விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது.
    • 30-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார்-ஆண்டாள் அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுகிறது. மேலும் அன்னம், சிம்மம், கருடன், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆடிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள், அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×