என் மலர்
வழிபாடு

ஐயப்ப வழிபாட்டில் பேட்டைத்துள்ளல் சடங்கு
- பேட்டைத் துள்ளல் சடங்கு நடை முறையாய் உள்ளது.
- ஐயப்ப வழிபாட்டில் பேட்டைத் துள்ளல் சடங்கும் ஒன்று.
ஐயப்ப வழிபாட்டில் பேட்டைத் துள்ளல் சடங்கும் ஒன்று. பேட்டை துள்ளாத ஐயப்பன் எவரும் கோட்டப்படி கடந்து சுவாமியின் பூங்காவனம் (காட்டின் பெருவழியில் ஆரம்பப்பகுதி) மிதிக்கக்கூடாது என்பது ஐதீகம்.
சுவாமி ஐயப்பன் தன் அவதார சமயத்தில் தன் படைகளோடு காட்டிற்குள் செல்வதற்கு வேடர்களோடு வேடர்களாக ஆடிப் பாடி பயணத்தைத் துவங்கியதை நினைவு கூறுவதற்கே இந்தப் பேட்டைத் துள்ளல் முறை நடை முறையாய் உள்ளது.
உடல் முழுவதும் சாயப்பவுடர் பூசிக் கொண்ட ஐயப்பன்மார்களில் இருவர் ஒரு குச்சியில் துணியைக் கட்டி அதில் சில காய்கறிகளைத் தோளில் சுமந்து வருவர்.
அனைவரும் பேட்டை சாஸ்தா கோவில் அடைந்து ஐயப்பனை வணங்குவர். எதிரில் உள்ள வாபரையும் வணங்கி பேட்டைத் துள்ளலை ஆரம்பிக்கின்றனர்.
Next Story






