என் மலர்
வழிபாடு

மனநிறைவு பெற இறைவழிபாடு அவசியம்
- சுகத்துடன் வாழ கடவுள் துணை வேண்டும்.
- தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து வாழ்வது சிறப்பு.
மனித பிறவி மகத்தான பிறவி, முற்பிறவியில் தற்செயல்களால் வாய்ந்தது. இப்பிறவியை எள்ளளவும் வீணாக்காமல் நலம் தரும் இகபர சுகத்துடன் வாழ கடவுள் துணை வேண்டும்.
மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அதனால் அவர்கள் மகிழ்வதை கண்டு மகிழ்வதே பெருவாழ்வு, அது அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை.
குறையாத அன்பும், மாறாத வாக்கும், தடையில்லா கொடையும், பிறருக்கு அருளும் குணமும் பெற்று வாழ்வோர் எண்ணிலடங்கா சிறப்புற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.
தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து வாழ்வது சிறப்பு. இயற்கையே நமக்கு அனைத்தையும் பகிர்ந்தே அளித்துள்ளது.
அதிக ஆசையின்றி அளவாக அனைத்தையும் துய்த்த நல்வாழ்வு வாழவேண்டும்.
வாழ்க்கை ஒரு மனித விளையாட்டு, இதில் தற்செயலைகள் என்னும் ஏணி மூலம் ஏறினால் துன்பமின்றி வாழ்க்கை பயணத்தில் வெற்றி பெறலாம்.
நமது குறைகளையும், தவறுகளையும் நினைத்து மனம் வருத்திக்கொண்டே இருப்பதை விட்டு மீண்டும் நல்ல முறையில் வாழும் முறையை வகுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய நிலையை அனைவரும் பெற இறைவழிபாடு இன்றியமையாதது. எனவே அனைவரும் அருணாச்சலேஸ்வரர் தீப தரிசனம் கண்டு வணங்கி, மற்றவர்களுக்கு உபயோகமாக வாழவேண்டும்.






