என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்
    X

    ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்

    • ஐயப்பனை ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.
    • அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.

    ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரிமலையில் கவுமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம். ஐயப்பனை இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.

    நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம். பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.

    தொப்புளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம். ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார். அச்சன் கோவில் சுவாதிஷ்டானம். நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன். ஆரியங்காவு - மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான இருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.

    ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தளம் - விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது. ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது

    Next Story
    ×