search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வீரத்தின் அடையாளமாக திகழும் ஆஞ்சநேயர்
    X

    வீரத்தின் அடையாளமாக திகழும் ஆஞ்சநேயர்

    • தீயசக்திகள் நம்மை நெருங்காது.
    • அனுமனை வணங்கினால் சனியின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.

    வீரத்தின் அடையாளமாக விளங்கக் கூடிய ஆஞ்சநேயகர் சனி பிடிக்காத தெய்வம் என்பதால் அனுமனை வணங்கினால் சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கலாம். தீயசக்திகள் நம்மை நெருங்காது. அனுமனை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலர் இவரின் தீவிர பக்தர்களாக இருந்து வருகின்றனர். பிரிந்திருந்த ராமரையும், சீதையையும் ஒன்று சேர்த்து வைத்ததுடன், ராமர் போரில் வெற்றி பெற்று சீதையை மீட்க முக்கிய பங்கு ஆற்றியவராகவும் இருந்தவர் அனுமன். அதனால் அவரை வழிபட்டால் பக்தர்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நமக்கும் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.

    அனுமன் வழிபாடு

    தீவிர ராம பக்தரான ஆஞ்சநேயர், ராமரின் வாயாலேயே சிரஞ்சீவி வரம் பெற்றவர். பக்தி, வீரம், பேச்சுதிறன், சேவை ஆகியவற்றிற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் வீர ஆஞ்சநேயர். அவரை வழிபடுபவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.அனுமனை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். உடல் வலிமை பெற விரும்புபவர்கள் அனுமனை வணங்கலாம். அனுமனை வழிபட்டால் மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடைவதுடன், குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீரும், நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கிரக தோஷங்கள் விலகும்.

    ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் அவரை வழிபட அனைத்து நாட்களும் ஏற்ற தினங்களாகும். இருந்தாலும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். இந்த கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை, துளசி மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஆஞ்சநேயர் சிறப்பான பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

    Next Story
    ×