search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
    X
    திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    திருத்தளிநாதர் கோவிலில் கலச பூஜை நடைபெற்று கொடிமரத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும் புனித கலச நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
    திருப்பத்தூர் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக 10-வது நாள் திருவிழா தொடக்க நாளான நேற்று காலை 6 மணிக்கு கலச பூஜை நடைபெற்று கொடிமரத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும் புனித கலச நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்று 6.30 மணிக்குகொடியேற்றப்பட்டது. பாஸ்கர குருக்கள் ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகவேள்வி பூஜையில் ஈடுபட்டனர். இன்று நாயுடு மகாஜனம் சங்கம் சார்பாக சந்திர சூரிய பிறை வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    தினமும் பல்வேறு மண்டகபடி சார்பாக இரவு சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 9-ம் நாள் திருவிழாவாக தேரோட்டமும், 10-வது நாள் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
    Next Story
    ×