என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகம்

    திருப்பதியில் வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்பட உள்ளதாக கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×