search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
    X
    அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

    ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

    இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி நாளை (8-ந்தேதி) புறப்பட்டு உற்சவர் சந்திரசேகரர் மற்றும் அம்பாள் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று.

    இந்த நாளில்தான் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். இந்த புனித நாளின் சிறப்பை பக்தர்களுக்கு உணர்த்த தீர்த்தவாரி நடைபெறும்.

    அதன்படி உற்சவர் சந்திரசேகரர் அம்பாளுடன் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு கலசபாக்கம் செய்யாற்றுக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக தனகோட்டிபுரம் கோவிலுக்கு சொந்தமான வயலுக்கு சென்று அங்குள்ள விளைநிலங்களை பார்வையிட்டார். அப்போது அங்கு அறுவடை செய்யப்பட்ட நெல்லில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

    இதையொட்டி சுவாமி- அம்பாள் செல்லும் வழிகளில் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். தொடர்ந்து மேல செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருமாமுடீஸ்வரர், அம்பாளுடன் பங்கேற்றார். இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி நாளை (8-ந்தேதி) புறப்பட்டு உற்சவர் சந்திரசேகரர் மற்றும் அம்பாள் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார்.
    Next Story
    ×