search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சக்கரத்தாழ்வார்
    X
    சக்கரத்தாழ்வார்

    திருப்பதி கோவிலில் 14-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    திருப்பதி கோவிலில் 14-ந்தேதி வைகுண்ட துவாதசி நாளில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.தலைமை செயல் அதிகாரி ஜவகர் தலைமை தாங்கினார்.அவர் பேசியதாவது;-

    வருகிற 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி 13-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு நித்யபூஜைகள் தொடங்கப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று மாடவீதியில் தங்கரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    14-ந்தேதி வைகுண்ட துவாதசி நாளில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    ஒமைக்ரான் தொற்றைக் கருத்தில் கொண்டு 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டதற்கான சான்றுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பதி மலையில் 2-வது சாலை சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்தது.இந்த பாதையில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    சாலையில் வழிகாட்டு பலகை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. வருகிற 10-ந்தேதி அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. 11-ந் தேதி முதல் இந்த சாலை பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது. இதில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    திருப்பதி பழைய கெங்கையம்மன் கோவில் அருகே 7 ஏக்கரில் மலர்ச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அதிலிருந்து தினமும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பூஜைகள் அலங்காரங்களுக்கு 100 முதல் 150 கிலோ பூக்கள் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 29,652 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14,916 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.75 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
    Next Story
    ×