search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி
    X
    திருப்பதி

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதியில் ஆண்டுக்கு 4 முறை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். தெலுங்கு வருட பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கம்

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி வரும் 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பாத்திரங்கள் போன்றவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்திய பிறகு ஸ்ரீசூர்ணம், கடக கற்பூரம், வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படும். அதற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதையொட்டி 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திங்கட்கிழமை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×