என் மலர்

  வழிபாடு

  சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதி
  X
  சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதி

  சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடுவாசிப்பு திருவிழா இன்று தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கார்த்திகை திருஏடுவாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது.
  குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்றாகும்.

  இங்கு வருடந்தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்ட சாமி தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அறிவுரைகள் மற்றும் அருள் வாக்குகளை ஏடாக வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருட திரு ஏடுவாசிப்புத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது.

  முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து பணிவிடையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சியினை பால. ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். பால.லோகாதிபதி, வக்கீல் யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இரவு 8 மணிக்கு வாகன பவனியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

  விழாவின் பதினைந்தாம் நாளன்று அதாவது 17-ந்் தேதி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. அன்று திருக்கல்யாண நிகழ்ச்சி திருஏடாக வாசிக்கப்படுகிறது. பெண்கள் திருமண சீர்வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பழங்கள் அடங்கிய பொருட்களை சுருள்களாக படைத்து அய்யாவை வழிபடுவது வழக்கம்.

  விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சாமிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாட்களில் காலை-மாலை பணிவிடையும் பகலில் உச்சிபடிப்பும் மாலையில் திருஏடுவாசிப்பும் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.
  Next Story
  ×