என் மலர்

  ஆன்மிகம்

  திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்
  X
  திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்

  திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் காலை தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. கோவில் தங்க வாசலில் உள்ள மணி மண்டபத்தில் கருடாழ்வார் சன்னதியில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, விஸ்வக்சேனர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டனர். அதேபோல் மூலவர் ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்து, ஆரத்தி காண்பித்து தீபாவளி ஆஸ்தானம் நடத்தப்பட்டது.

  அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

  தீபாவளி ஆஸ்தானத்தில் பெரியஜீயர், சின்னஜீயர், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  அதேபோல் திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில்களில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.

  Next Story
  ×