search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
    X
    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

    மருதமலை கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: தேரோட்டம் ரத்து

    முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வடவள்ளி :

    முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.

    இதுகுறித்து அறநிலை யத்துறை துணை ஆணையர் விமலா கூறியதாவது:-

    மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் இன்று இரவு வாஸ்து சாந்தி மற்றும் விநாயகர் பூஜையுடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. நாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

    28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் வீதி உலா வருகிறார்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 27-ந் தேதி மாலை முதல் 28-ந் தேதி காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. 28-ந் தேதி காலை 7 மணிக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×