search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொளஞ்சியப்பர் தங்ககாப்பு அலங்காரத்திலும், சித்தி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்த காட்சி.
    X
    கொளஞ்சியப்பர் தங்ககாப்பு அலங்காரத்திலும், சித்தி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்த காட்சி.

    கொளஞ்சியப்பர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது

    விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது.
    விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கொளஞ்சியப்பர் தங்க காப்பு அலங்காரத்திலும், சித்தி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி காலையில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, விருத்தாசலம் வேடப்பர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி பெருவிழா தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    Next Story
    ×