search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்ரிநாத் கோவில்
    X
    பத்ரிநாத் கோவில்

    கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில்

    இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

    கயிலை மலை சுனாமி

    11. 06. 2013ல் கயிலை மலையில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கடும் மழையின் காரணமாக, அலக்நந்தா மற்றும் கிளை ஆறுகளில் கடும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பத்ரிநாத் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது. மேலும் உத்தராகண்டம் மாநிலத்தில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் முதலிய கோயில்களும், பொதுக்கட்டிடங்களும், வீடுகளும் பெருஞ்சேதம் அடைந்துள்ளது. [1]ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்து விட்டனர். இப்பகுதியில் உள்ள தரைவழிப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாலும், ஆயிரக்கணக்கான இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாலும், இதனை சீர்செய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என உத்தரகாண்ட் மாநில அரசின் அறிவிப்பால், அடுத்த மூன்று ஆண்டுகள் இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள இயலாது. இந்த கோரமான நிகழ்வினை, இப்பகுதி மக்கள் “ இமயமலை சுனாமி]] என்று அழைக்கின்றனர்.

    உத்தவரும் பதரிகாசிரமமும்


    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர் கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார். உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார். பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை பதரிகாசிரமம் சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் என்னை வந்தடைவாய் என்று பகவான் கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் அருகில் உள்ள பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார் உத்தவர்

    நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். பனி மூடிக்கொள்வதால் குளிர் காலம் முழுவதும் கோயில் மூடப்படும். குளிர்காலம் முடிந்த பின், நடை திறக்கப்படும். 
    Next Story
    ×