search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோவில்
    X
    திருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோவில்

    திருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோவில்

    கேதுவால் நாம் மேலும் பலன்கள் பெற செல்ல வேண்டிய தலம் திருக்கூடலூரில் உள்ள ஆடுதுறை பெருமாள் கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நவக்கிரகங்கள் வரிசையில் இறுதியில் 9-வது இடத்தில் இருப்பவர் கேது. ராகுவின் தொடர்ச்சியாக இவர் உள்ளார். கேதுவால் ஆதிக்கம் செலுத்தப்படு கிறவர்கள் ஆன்மீகத் துறையில் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பார்கள். யோகம் மாந்திரீகம் போன்றவற்றில் ரகசியமாக ஈடுபடுவார்கள். நீதியும் நேர்மையும் தவறாமல் ஒழுங்கமாக வாழ்வார்கள். இவர்களில் பலரிடம் முன் கோபம் காணப்படும்.

    இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அபூர்வம். எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமாக ஆடை அணிவதில் விருப்பம் இராது. ஆனால் எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்திருப்பார்கள். எதிலும் நிதானமாகவே நடந்து கொள்வார்கள். கேதுவால் நாம் மேலும் பலன்கள் பெற செல்ல வேண்டிய தலம் திருக்கூடலூரில் உள்ள ஆடுதுறை பெருமாள் கோவிலாகும்.

    புராணப்பெயர் - திருக்கூடலூர், வடதிருக் கூடலூர்,ஆடுதுறைப் பெருமாள் கோயில்.
    மூலவர் - வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
    உற்சவர் - வையம் காத்த பெருமாள்
    தாயார் - பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
    தீர்த்தம் - சக்ர தீர்த்தம்

    திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

    திருவையாறிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். இது ஆடுதுறை பெருமாள் கோயில் மற்றும் சங்கம சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
    கோயிலில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சந்நதிகள் உண்டு.ராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.கோயிலுக்கு உள்ளே ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்கள் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.

    கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர் வையம் காத்த பெருமாள், உய்யவந்தார், ஜகத்ரட்சகன் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார்.கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அந்த பெயர்.

    நந்தக முனியும், தேவர்களும் ஒன்று கூடி ஹிரண்யாக்ஷணின் கொடுமையிலிருந்து பூவுலகை காக்க மகாவிஷ்ணுவை வேண்டிய காரணத்தால் இத்தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது நந்தக முனியின் மகளான உஷை, தலப் பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மீது மையல் கொண்ட சோழ மன்னன் அவளை மணந்ததாகவும் அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களால், மன்னன் அவளைப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழ காரணமாக இருந்ததாகவும், அதனால் கூடலூர் என பெயர் பெற்றதாகவும் கதையும் உண்டு

    காவிரி இவ்விடத்தில் திருமாலை வணங்கி பாப விமோசனம் பெற்று இழந்த பொலிவை திரும்பிப் பெற்றாள். அம்பரீசன்,திருமங்கையாழ்வார்,பிரம்மா, கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று வழிபட்ட புண்ணியத் தலம் இதுவாகும்.

    இக்கோவிலின் மூலவரான வையம் காத்த பெருமாள் நின்று கோலத்துடன் கிழக்கு திசையை நோக்கியவாறு சேவை தருகின்றார். மூலவருக்கு உய்யவந்தான், ஜெகத்ரட்சகன் என்ற பிற பெயர்களும் உண்டு. நந்தக மகரிஷிக்கு இம்மூலவர் பிரதியட்சம் ஆனவர். தாயார் பதம்மாசினி என்றழைக்கப்படும் புஷ்பவல்லி தாயார் ஆவார்.

    திருமங்கையாழ்வார் இக்கோவிலில் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். தேவர்களும் நந்தக மகரிஷியுடன் கூடி நின்று பெருமாளை பிரதியட்சமாக கூடி நின்ற கண்டமையால் கூடலூர் என்று பெயர் பெற்றது. இதனை சங்கம ஷேத்திரம் என்று பண்டிதர்கள் கூறுவர்.

    ஒரு சமயம் காவிரி நதியில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாய் இத்தலம் முழுமையாக மூழ்கி மண் மேடாகிப் போனது. அப்போது மதுரையம்பதியை ஆண்டு வந்த ராணி மங்கம்மாளின் கனவில் எம்பெருமான் தோன்றி இத்தலத்து கோவில் மண்மேட்டில் புதைந்து கிடக்கும் விபரத்தைத் தெரிவித்ததாகவும், எம்பெருமானாகிய பெருமாளின் ஆணைப்படி இத்தலம் ராணி மங்கம்மாவால் புதுப்பிக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. உற்சவமூர்த்தி தனது பெயரான ஜெகத்ரட்சகன் என்ற பெயருக்கு ஏற்றவாறு தமது கரத்தில் செங்கோல் ஏந்தி காணப்படுகின்றார்.


    Next Story
    ×