search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெள்ளியங்குடி கோவில்
    X
    திருவெள்ளியங்குடி கோவில்

    திருவெள்ளியங்குடி கோவில்- தஞ்சாவூர்

    திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
    கோவிலின் பெயர் : கோலவில்ராமன் திருக் கோவில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்.
    மூலவர் : கோலவல்வில்லி ராமன்
    கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
    தாயார் : மரகதவல்லி
    உற்சவர் : சிருங்கார சுந்தரன்
    விமானம் : புஷ்கலா வர்த்தக விமானம்
    தல விருட்சம் : கதலி மரம் (வாழை மரம்)
    தீர்த்தம் : சுக்ர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசுர தீர்த்தம்.
    காட்சி கண்டவர்கள் : பிரம்மா, இந்திரன், சுக்கிரன், பராசுர முனிவர், மயன், மார்க்கண்டேயர், பூமாதேவி.
    பாசுரங்கள் : 10

    சிறப்புகள் : 108 திவ்ய தேசங்களில் சுருடாழ்வார் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பது இங்கு மட்டும்தான். கருங்கல் தரையில் தல விருட்சமான செங்கதலி வாழை வருடம் தோறும் பூத்துக் காய்ப்பது ஒரு அதிசயம். இந்தத் தலத்தைச் சுற்றியே நவக்கிரகத் தலங்கள் அனைத்தும் அமைந்துள்ளன.
    வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தலத்தை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம். ஒரு மண்டலத்திற்கு விளக்கேற்றி வழிபட்டால் கண் பார்வை தெளிவாகும்.

    செல்லும் வழி : கும்பகோணம் அணைக்கரை பாதையில் சோழபுரம் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் அணைக்குடி வழியாகவும் செல்லலாம்.

    பிருகு மகரிஷியின் புதல்வனாக அவதரித்தவர் பார்கவன். அவருக்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. அசுரர்களுக்கு குருவாக விளங்கிய சுக்கிரன் காசிக்கு சென்று ஒரு லிங்க பிரதிஷ்டை செய்து பல ஆண்டு காலம் கடுமையான தவம் செய்தார். அவர் முன்னே பரமசிவன் தோன்றி அவர் தவத்தை மெச்சி இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ம்ருத சஞ்ஜீவினி என்ற மந்திரத்தை உபதேசித்தார்.

    இவரது சக்தியை அறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவர்களுக்கும் இவர்களுக்கும் போர் நடந்துகொண்டே இருக்கும்.
    அசுரர்கள் இறந்துவிட்டால் ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தை பிரயோகித்து உயிர்ப்பிக்க செய்து விடுவார் சுக்கிரன். தேவர்களுக்கும் குருவாகிய பிருகஸ்பதிக்கும் இந்த வித்தை தெரியாது. ஆகையால் தன் மகன் கசன் என்பவனை சுக்கிரனிடம் அனுப்பி ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தை கற்று வர அனுப்பினார்.

    சுக்கிரனுக்கு நான்கு குமாரர்களும், தேவயானை, கரசை என்று இரண்டு குமாரிகளும் உண்டு. இவர் வெண்மையான நிறமுடையவர். அதனால் இவருக்கு வெள்ளி என்றும் பெயர் உண்டு.

    மகாபலி சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்டபோது, சுக்கிராச்சாரியார் அவ்வாறு மூன்றடி மண் கொடுக்க வேண்டாம் என தடுக்க, மகாபலி அதை கேளாமல் நீர் வார்த்து கொடுக்க முனைந்த போது நீர்வார்க்கும் கெண்டியின் மூக்கினுள் சுக்கிரர் வண்டாக உருவெடுத்து நீர்வராமல் அடைத்துக் கொள்ள, அது கண்ட மகாபலி தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்குள் செருக, அது சுக்கிரனின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரர் ஒரு கண் இழந்தவரானார். நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஒரு தனிச்சிறப்பு இடத்தை பெறுகிறார்.

    சுக்கிரனை சுக்கிரபகவான் பென் கிரகமாகக்கருதப்படுகிறார். அவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருளைத் தருவார். உல்லாசத்தையும் சரச சல்லாபத்தையும் கொடுப்பார். கேந்திரங்களில் அமர்ந்தால் பல தோஷங்கள் நீக்குவார் வியாபாரத்தை பெருக்குவார். அவர், ‘களத்திரகாரன்’ என்று குறிப்பிடப்படுகிறார். அவர் மூலமாக கணவனைப் பற்றியும், மனைவியைப் பற்றியும் அவர்களிடையே நிலவும் உறவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
    அவர் செல்வாக்கு, ஆடை அணிகலன்கள், வண்டி, வாகனம், நிதி, சுகம், காமம், சயன சுகம், வீடு, இசை, நாட்டியம், கவிதை, நாடகம், பாடல்கள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றைத் தருவார்.

    சுக்கிரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறவர்கள் அழகாகவும், அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாவும் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்களாவும், கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் இருப்பார்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கண்களைப் பெற்றிருப்பார்கள். அன்பு, இரக்கம் போன்றவற்றைப் பெற்ற இவர்கள் மனப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால்.

    அதைச் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். இவர்களுக்கு மனைவி மூலமாக அதிர்ஷ்டம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. தெய்வீகப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். பல அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள். சுக்கிரன் கோட்சார ரீதியாய் ஜென்ம ராசிக்கு 1,5,8,9,11,12-ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும் ஏனைய இடங்களில் மாறான பலன்களையும் அளிக்கும்.

    சுக்கிரன் மாக்கோள் ஒவ்வொரு ராசியையும், கடக்க ஒரு மாதமாகும். அதனால் இதன் மாற்றத்தை பற்றி அறிய மக்கள் பெருமளவு கவனம் செலுத்த மாட்டார்கள்.
    சுக்கிர தசை நடைமுறையில் இருக்கும் காலங்களில் அதனால் தீய பலன்கள் நடக்காமல் இருக்க அதி தேவதையான மகாலட்சுமியை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வருவது நன்மை அளிக்கும்.

    மேலும் குரு தோஷங்களைப் போக்கி குரு கிரகம் தொடர்பான பலன்களைப் பெற திருவெள்ளியங்குடி தலத்துக்கு சென்று கோலவல்வில்லி ராமனை வழிபட வேண்டும்.
    திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

    திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்குறியது. பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் என்ற சிறப்புக்குரியது. குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
    நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. சுக்ரபுரி என்றும் அழைப்பர்.

    வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. வந்திருப்பது சாதாரணச் சிறுவன் அல்ல என்று மகாபலிக்கு உணர்த்தினார் சுக்ராச்சாரியார்.  ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் மகாபலிச் சக்ரவர்த்தி இல்லை. மகாபலி நீர் வார்த்து தானம் தரவிருக்கும் கமண்டல பாத்திரத்தின் நீர் வரும் துளையை ஒரு வண்டாக உருமாறி அடைத்து கொண்டார் சுக்ராச்சாரியார்.

    இதை அறிந்த பகவான் நீர் வரும் தூவாரத்தை ஒரு குச்சியால் குத்த ஒரு கண்னை இழந்தார் சுக்ராசாரியர். மீண்டும் இத்தல பெருமானை நோக்கி தவமிருந்து இழந்த கண்னை பெற்றார். அசுரர்களுக்கு தச்சராக இருந்த மயன் தவமிருந்து திருமாலை வேண்ட சங்குசக்கரதாரியாக காட்சி தந்தார். பரமாத்மா இராமபிரானாக காட்சி அளிக்குமாறு வேண்டினார். திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார்.

    பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலம். இத்தலத்து மூலவரான கோமளவல்லி ராமர் கிடந்த கோலத்துடன் புஜங்க சயனாய் கிழக்கு முகம் நோக்கி சேவை தருகின்றார். பிரம்மா, இந்திரன், மயன், மார்க்கண்டேயர், பராசுரர், சுக்கிரன், பூமாதேவி ஆகியோருக்கு இத்தலத்துப் பெருமாள் பிரதியட்சம் ஆனவர். இத்தலத்து தாயார் மரகதவல்லித் தாயார் ஆவார். உற்சவ மூர்த்தி சிருங்கார சுந்தரன் என்றழைக்கப்படுகின்றார். திருமங்கையாழ்வார் இத்தலத்தில் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    இத்தலத்தில் சுக்கிரனாகிய வெள்ளி எம்பெருமானை நோக்கி தவம் இருந்து சேவித்தபடியால் இத்தலத்திற்கு வெள்ளியங்குடி என்ற பெயர் உண்டானது. இந்த சுக்கிரன் பிருகு முனிவரின் மகனாவார். பார்க்கவன் என்ற பெயரைக் கொண்டவர். ஒருசமயம் சுக்கிரனாகிய பார்க்கவன் குபேரனை மிரட்டியபோது, குபேரன் சிவபெருமானிடம் முறையிட்டதால் பார்க்கவனை எடுத்து சிவபெருமான் விழுங்கினார். இதைக்கண்ட அசுரர்களும், தேவர்களும் வேண்டிக் கொண்டதன் பயனாய் சிவபெருமான் தன் சுக்கிலத்தின் வழியே பார்க்கவனை வெளியாக்கினார். அதன் காரணமாய் வெண்ணிறமும் பிரகாசமும் பெற்றதால் சுக்கிரன் என்ற பெயரினைப் பெற்றார்.

    இவ்வாறு வெளிவந்த சுக்கிரன் கோசல நாட்டின் மன்னராக, வேடனாக, அன்னமாக, பண்டார சந்நிதியாக, சூரியகுல குருவாக பல பிறவிகள் எடுத்து முடிவில் வேதப் பிராமணராக கங்கைக்கரையில் வாழ்ந்து வந்தார். அப்போது பிருகு முனிவரும் யமதர்மனும் இவரை சந்தித்து ஞானத்தை உண்டாக்கி சுக்ராச் சாரியாராக மாற்றினர்.

    இந்த சுக்ராச்சாரியாருக்கும் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் மார்க்கண்டயருக்கும் பராசுர மகரிஷிக்கும் அசுர குலத்தில் தோன்றியத் தச்சன் மயனுக்கும் இத்தலத்து மூலவர் பிரதியட்சம் ஆனவர். இத்தலத்து எம்பெருமானை தரிசித்துச் சேவித்தால் 108 தலத்து எம்பெருமானை சேவித்த பலன் கிடைத்திடும் என்று கூறப்படுகிறது.
    ராவணனின் மனைவியான மண்டோதரியின் தந்தை மயன் அசுர தச்சன் ஆவார். மகாபாரதம் நடைபெற்ற காலத்தில் அர்ச்சுணனிடம் அடைக்கலம் ஆனார். பின் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்த ஒரு மாபெரும் மணி மண்டபத்தை நிர்ணயித்த கலைஞன் ஆவார். இம்மயன் அசுரர்களுக்காக வானில் தவழும் திரிபுரத்தையும் இறந்தவர்களை பிழைத்திட வைத்திடும் அமுத கிணற்றையும் படைத்தார்.

    இதை அறிந்த எம்பெருமான் பசுவாகவும், பிரம்மா பசுங்கன்றாக வும் உருவெடுத்துச் சென்று அமுத கிணற்றினை நக்கி வறண்டு போக வைத்தனர். அமுத கிணறு வறண்டது கண்ட மயன் தன் மருமகனாகிய ராவணனை கொன்ற ஸ்ரீ ராமபிரானை தரிசித்திட வேண்டி இத்தலத்திற்கு வந்தபோது எம்பெருமான் சங்கு சக்கரம் இல்லாது கோலவில் ராமனாக தன் கையின் மீது தலைவத்து புஜங்க சயனத்தில் மயனுக்கு சேவை தந்ததாக கூறப்படுகிறது.

    இத்தலத்தில் அனேக மகான்கள் தங்கி வியாச பூஜை செய்துள்ளார்கள். மேலும் உலகளாவிய நன்மைகளைத் தந்திடும் சுக்கிரனாகிய வெள்ளியின் தத்துவ விளக்கத்தை உணர்த்திடும் தலமே திருவெள்ளியங்குடி ஆகும். இத்தலத்தில் வாழை மரம் தல விருட்சமாக உள்ளது. இத்தலம் போலவே திருக்கதம்பனூர் தலத்திலும் வாழை மரம் தலவிருட்சமாக உள்ளது. இக்கோவிலில் சுக்கிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை புஷ்கரணிகளாக உள்ளன. இக்கோவில் கோபுர விமானம் புஷ்கலா வர்த்த விமான அமைப்புடன் உள்ளது.


    Next Story
    ×