என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சஷ்டிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    X

    சஷ்டிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    கந்த சஷ்டி தொடங்கிய 6 நாட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அருணகிரி நாதர் வழங்கிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
    கந்த சஷ்டிக்கு விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

    - அருணகிரி நாதர்
    Next Story
    ×