என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவபெருமான் அருள் கிடைக்க இந்த ஸ்லோகத்தை பிரதோஷ நாட்களில் சொல்லி வரலாம்.
    பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்     
    ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
    பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய||

    - பிரதோஷ காலத்தில் இந்த ஸ்லோகத்தை 18 முறை காலை, மாலை - இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள் கிட்டி நினைத்தது நிறைவேறும். 
    சிவனுக்கு உகந்த பிரதோஷ தினங்களில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் பிரச்சனைகளை சிவபெருமான் தீர்த்து வைப்பார்.
    அபய வரத ஹஸ்தம்
    சௌம்ய ஸ்ருங்கார பாவம்
    விபுல வதன நேத்ரம் சந்த்ர
    பிம்பாங்க மௌளிம் ருஜூதனு
    ஸமபாதாஸ்தானகம் வித்ருமாபம்
    ஹரிண பரசு பாணிம் பத்மபீடோபரிஸ்தம்.

    - சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் உச்சரித்து வந்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
    நமது கஷ்டங்கள் தீர ஏழுமலையானின் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொருள்:

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
    நம் இல்லத்தில் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைத்தால் செல்வநிலைக்கு பஞ்சம் ஏற்படாது.
    நம் இல்லத்தில் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைத்தால் செல்வநிலைக்கு பஞ்சம் ஏற்படாது. எனவே தினமும் லட்சுமி தேவியின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வரலாம்

    பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி
    மின்னுநவ ரத்தினம்போல் மேனியழகுடையாள்
    அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
    தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே.
    நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    எல்லா சக்திகளையும் உடையவளே! செல்வங்களின் இருப்பிடமே! தேவர்களால் வழிபடப்படுவளே! உனக்கு நமஸ்காரம். சங்கையும், சக்கரத்தையும், கதையையும் கையில் கொண்டவளே! மஹாலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
    இம்மந்திர சுலோகம் ஸ்ரீ கருட புராணத்தில் உள்ளது. இதை ஜெபித்து வர பாபங்கள் விலகும்.
    ஸ்ரீ காயத்ரி மந்திர சுலோகம் :

    சாவித்திரி வேதமாதாச காயத்ரி ச சரஸ்வதி |
    சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ சதாசர்வ அர்த்த சாதினீ |
    சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச ||

    இம்மந்திர சுலோகம் ஸ்ரீ கருட புராணத்தில் உள்ளது. இதை ஜெபித்து வர பாபங்கள் விலகும். குளிக்கும் முன் குளிக்கப்பயன்படுத்தும் நீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து பின் குளித்து வர பாவ வினைகளால் வரும் துன்பங்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். இறை வழிபாட்டின் பொழுது இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்துக் கொண்டு கொஞ்சம் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
    பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் இந்த விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் படிப்படியாக உங்கள் வறுமை நீங்கும்.
    தனதான்யபதிர் தந்யோ தனதோ தரணீதர :|
    த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||

    - இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும், ஆன்மீக, தியான நிலையில் உயர்வும் கிட்டும்.
    நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது.
    தன் வினைதான் தன்னைச் சுடும். நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது. நல்லது செயின் நல்ல விளைவுகள் ஏற்படும்.

    நமச்சிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
    தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
    ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
    தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

    ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
    அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, மேலே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.

    சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும்.

    உங்களுடைய பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திடும். வாழ்வில் நிறைவு ஏற்படும்.

    எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள்.
    தேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை? நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.

    பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
    அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனப்பாடம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!
    வாழ்வில் வளம் தரும் அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம் இது.
    ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே
    ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
    பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
    அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!

    - இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
    காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையில் கண்விழித்த பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

    ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

    நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
    ராமநவமியான இன்று சொல்ல வேண்டிய ஸ்ரீராமர் ஸ்லோகம்
    ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
    ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
    ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
    ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

    கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
    துறு துறு சிறுவன் தசரத ராமர்
    கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
    ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

    இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
    ராஜ குருவாம் பரத ராமர்
    தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
    அன்புள்ள கணவன் சீதா ராமர்

    மூத்த மகனாம் சுமித்ர ராமர்
    மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
    மன்னித்தருளும் கைகேயே ராமர்
    மகனே போன்றவர் ஜனக ராமர்

    உற்ற தோழன் குகனின் ராமர்
    உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
    தெய்வ உருவாம் அனுமத் ராமர்
    ஞான சூரியன் ஜாம்பவ ராமர்
    எளிய விருந்தினர் சபரியின் ராமர்
    அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
    கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
    பாப வினாசனர் கோதண்ட ராமர்

    ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
    பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
    மக்கள் மகிழும் அரசுடை ராமர்
    பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

    வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
    சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
    இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
    திருமண நாயகன் ஜானகி ராமர்

    சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
    ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
    கடலை வென்ற வருண ராமர்
    பாலம் கண்ட சேது ராமர்

    மரம் ஏழு துளைத்த தீர ராமர்
    மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
    குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
    குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

    சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
    காதலை மறவா சீதையின் ராமர்
    தாயுமானவர் லவகுச ராமர்
    தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

    கீதை தந்த கண்ணன் ராமர்
    கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
    சிவனை வணங்கும் பக்த ராமர்
    சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

    முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
    தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
    காந்தியின் கடவுள் சத்திய ராமர்
    அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

    ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
    ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
    ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
    ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

    ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
    ராம் ராம் என்றால் உவகை பெருகும்
    ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
    ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

    ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
    ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
    ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
    ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

    ராம் ராம் என்றால் மனது அடங்கும்
    ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
    ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
    ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

    ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
    ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
    துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
    இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
    கர்ப்பிணி பெண்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சுகப்பிரசவம் நடக்கும்.
    ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
    மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்
    சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
    ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!

    இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்ரஸவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது.

    மேலும் கடவுள் கிருபையால் சுகப்பிரசவம் ஆனபிறகு ஸ்ரீதாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழமும், பசும்பாலும் அர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகும். 
    ×