என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.
    இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.

    சுற்றும் கருடன் சூழக் கருடன்
    பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
    கருடன் கருடன் கருடன்.
    இந்த நரசிம்மர் மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.
    நீங்கள் எந்த ஒரு முயற்சி செய்வதாதும் ஏதாவது தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.

    அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

    யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
    அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
    அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
    ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். “பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!

    தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
    தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
    நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
    துன்பத்தைப் போக்குபவனே!
    லட்சுமி நரசிம்மனே!
    செல்வவளம் உண்டாக, பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலக இந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
    சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

    இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி, மனநிம்மதி உண்டாகும். புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும். தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
    இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் திருமண தடை, வேலை, பதவி உயர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.
    ஓம்|
    க்லீம் ஹூம் மாதங்க்யை|
    மம வாஞ்சிதம் சித்தே பட் ||

    இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து ஜெபித்து வர பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.

    மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம், வேலை, பதவி உயர்வு) இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.
    எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான்.
    இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப் போற்றி வழிபடப்படுகிறாள். இவளை வழிபட கல்வி, செல்வம், வீரம் என யாவும் கிட்டும். எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்று சிவபிரானும் கூறுகிறார்.

    மந்திரம் :

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ||


    - இந்த மந்திர ஜெபத்தை முதன் முதலில் பௌர்ணமி அன்று தொடங்கவும். மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் பட்டுத்துணி உடுத்தி மஞ்சள் துண்டு விரித்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

    நெய் விளக்கேற்றி விளக்கில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை ஆவாஹனம் செய்து, வாழையிலையில் பச்சரிசி பரப்பி அதில் புவனேஸ்வரி யந்திரம் வைத்து அந்த யந்திரத்தை குங்குமம், ரோஜா இதழ்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சித்து 3000 தடவை மந்திரம் சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய மந்திரம் சித்தியாகும். பின்னர் அந்த யந்திரத்தையும் ஜப மாலையையும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.

    பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு இனிப்பு பண்டம், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து பூஜையை நிறைவு செய்க.

    இந்த ஜெப முறை விரைவான நிறைவான நல்வாழ்வு தரும் என்று சொல்லப்படுகிறது.
    பதினாறு செல்வங்களும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வர வேண்டும்.
    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
    தப்பாமற் சார்வார் தமக்கு.
    ஔவையார் அருளியது.

    பொருள்:

    தினமும் மலர்களால் தும்பிக்கையான் மேல் நம்பிக்கை வைத்து அவர் பாதங்களை அர்ச்சிப்பவர்க்கு நல்ல வாக்குபலிதம், தீங்கு  செய்வோரையும் மன்னித்து, மறக்கும் நல்ல மனம், திருமகளின் கடைக்கண் பார்வை ஆகியன கிட்டும்.

    (ஔவையார் அருளிய இத்துதியை விநாயகர் சதுர்த்தி அன்று  ஆரம்பித்து தினமும் பாராயணம் செய்ய பதினாறு செல்வங்களும் கிட்டும்.)
    திருமணத்தடை நீங்கவும், விரைவில் திருமணம் நடைபெறவும், நல்ல குணமுடைய கணவன் அமையவும் பெண்கள் தினமும் ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை பார்க்கலாம்.
    1. ஓம் |
    காத்யாயனி மஹாமாயே |
    மகாயோகின்யதீச்வரி |
    நந்தகோபசுதம் தேவீ |
    பதிம் மே குருதே நமஹ ||

    ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து, தாமரைத்தண்டுத் திரியினால் விளக்கேற்றி இந்த மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    துர்கா மந்திரம் :

    ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
    பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||

    ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து, தாமரைத்தண்டுத் திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

    3. ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.

    ஓம் |
    ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம் ஜம் ஜம் |
    வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

    4. திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

    ஸ்ரீ கணேஷ மந்திரம் :

    ஓம்|
    ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||
    பண பிரச்சனை, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
    ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு நோக்கி அமரவும்.

    நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி, ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை, குங்குமம், பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

    வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், பாயசம் படைக்கவும். பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்க வேண்டும்.

    தியான ஸ்லோகம் :

    ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
    த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
    பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
    தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||

    மூலமந்திரம் :

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
    லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
    மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

    ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும். நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.
    பெண்கள் இந்த பராசக்தி பாடலை தினமும் பாடி வந்தால் துன்பம் படிப்படியாக அகலும். தினமும் சொல்ல முடியாதவர்கள் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் சொல்லி வரலாம்.
    அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி

    ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி

    இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி

    ஈடில்லா காட்சி அளிப்பாள் அன்னை பராசக்தி

    உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி

    ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி

    எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி

    ஏகாட்சரமாய் அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

    ஐங்கரநாதனை ஆதியில் தந்தால் அன்னை பராசக்தி

    ஒட்டியான பீடத்தில் அமர்வாள் ஆதிபராசக்தி

    ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி

    ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

    ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி

    ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி

    ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி

    ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதிபராசக்தி

    ஓம் என்றாலே உருவாய் வருவாள் அன்னை பராசக்தி

    ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதிபராசக்தி

    அன்னை பராசக்தி ஜெய ஆதி பராசக்தி

    அன்னை ஆதிபராசக்தி ஜெய ஆதிபராசக்தி
    உங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமானால் துர்க்கையம்மனின் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் பெறலாம்.
    ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி
    துர்க்கா தேவி சரணம்!
    ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
    சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
    இந்திரா தேவி மோஹினி சரணம்
    மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
    கமலாதேவி சரணம் சரணம்
    பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
    புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
    மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
    மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
    மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
    ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
    பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!

    குருபகவானுக்கு உரிய இந்த ஸ்லோகத்தை குருபெயர்ச்சி அன்று சொல்லி வந்தால் வாழ்வில் வளர்ச்சி பெறலாம்.
    தேனாம்ச ரிஷினாம்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்!
    புத்தி பூதம் த்ரிலோகேஸம்
    தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

    குருபகவானைப் போற்றிப்பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது, தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். 16 திரி வைத்து விளக்கு ஏற்றுவது உகந்தது.
    பூஜை வேளைகளில் சொல்ல வேண்டிய சக்தி மந்திரம் இது. இதை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;
    ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;
    ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;
    ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;
    ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;


    ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;
    ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;
    ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;
    ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;
    ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;
    ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
    ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;
    ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;
    ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
    ஓம் காளி ! ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!
    ×