என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
    ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் :

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
    ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை
    பலாயை ஸ்வாஹா !
    ஓம் குபேராய நமஹ
    ஓம் மகாலட்சுமியை நமஹ

    - என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

    காலையில் எழுந்தவுடன் இந்த விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி வந்தால் அன்றைய தினம் முழுவதும் எந்த செயலை செய்வதாலும் தங்குதடையின்றி நடக்கும்.
    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.
    பிரதோஷ காலத்தில் சிவனுடன் கூடவே அவரது வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும்.
    பிரதோஷ காலத்தில் சிவனுடன் கூடவே அவரது வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கும்  பால், தயிர், சந்தனம், எண்ணெய், நெய், இளநீர், போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும். பின் பூ, வில்வம் முதலியவற்றால் அர்ச்சனைகள் நடக்கும்.

    முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும். அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.

    நந்திகேச மஹா பாகா சிவ த்யான பராயணா
    உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி

    பொருள்:

    சிவத்யானத்தில் சதா ஈடுபட்டுள்ள நந்தி பகவானே! நான் சிவ பார்வதி சேவை செய்ய அனுமதி அளிப்பாயாக!!

    - இவ்வாறு இந்த நந்தி ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டால் சிவனின் அருள் நமக்கு பிரதோஷகாலத்தில் கிடைக்கும்.

    முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும். அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.
    நோய்கள் வராமல் காத்திடவும், நலன்கள் பெருகிடவும் பயனுள்ள ராமர் ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாசகம்
    ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜேஹம் ராமமத்வயம்
    நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பயாபஹம்
    ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராமமத்வயம்

    - ஸ்ரீராம புஜங்காஷ்டகம்

    பொதுப்பொருள்:

    அழகான ஜடை முடியைக் கொண்டவரே, எல்லா பாவங்களையும் போக்கும் பெருநிதியே, அனைத்து பக்தர்களையும் காத்து சந்தோஷம் அளிப்பவரே, இணையற்ற எம்பெருமானே, ஸ்ரீராமா, உம்மை உளமாற வணங்குகிறேன். ஆத்மாவின் வடிவை உணரச் செய்த அற்புத நாயகனே, கருணைக்கடலே, ஜனன மரண பயத்தையும், உடல் வேதனையையும் நீக்கி, நோய் நொடியற்ற தீர்க்காயுளை அருளும் தயாபரனே, எந்த தோஷமும் தீண்ட இயலாதவரே, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

    கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது.
    தடைகளைப் போக்கி வெற்றி, நன்மைகளைத் தந்தருள்பவர் ஸ்ரீ அகோரமூர்த்தி. மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண்காட்டில் இப்பெருமானை தரிசிக்கலாம். கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. தினமும் அதிகாலையில் 21 முறை வீதம் இத்துதியைச் சொல்லி வந்தால், நல்ல பலன் நிச்சயம்.

    ஸகல கன ஸமாபம்
    பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
    புஜகதரம கோரம்
    ரக்த வஸ்த்ராங்க தாரம்
    பரசு டமரு கட்கம்
    கேடகம் பாணச்சாயை
    திரிசிகநர கபாலை
    விப்ரதாம் பாவயாமி
    எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்.
    “ யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை நமோ நமஹ!!”
     
    என்கிறது தேவி மஹாத்மியம்.
     
    இதன் பொருள்:
     
    “எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்,”
     
    தேவி மஹாத்மியத்தில் சப்தசதி என்ற பிரிவில் 700 சுலோகங்கள் தேவியின் அழகையும் வீரத்தையும் வருணிக்கின்றன. இப்பராசக்திதான் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி என்று விளங்கி பரமனின் பத்தினியாகவும் விளங்குகிறாள் என்றும் அவளே மலை மகளாகவும், கலைமகளாகவும், அலைமகளாகவும், துர்க்கையாகவும் அவதாரம் எடுக்கிறாள் என்றும் மார்கண்டேய புராணத்தில் வரும் தேவி மஹாத்மியம் கூறுகிறது.
    கருடருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கலாம்.
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    சுவர்ணபக்ஷõய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

    ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
    சுவர்ணபக்ஷய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

    ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
    தனாயுபுத்ராய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
     
    கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.
    வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

    தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.

    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

    மந்திரம் :


    ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
    ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
    ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
    ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
    சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
    சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருத
    திருமணம் தடை படுபவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.
    திங்கட்பகவின்மணம் நாறும்
    சீறடி சென்னிவைக்க
    எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
    ணிறந்த விண்ணோர்
    தங்கட்கும் இந்தத் தவமெய்து
    மோதரங் கக்கடலுள்
    வெங்கட் பணியணை மேல் துயில்
    கூரும் விழுப்பொருளே.

    பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.
    இந்த ஸ்லோகத்தை படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.
    ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.

    யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ
    மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி !
    ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா மன்தே ச
    வேதாந்தமஹாரஹஸ்யம்!!

    பொருள் :

    பால சந்திரனை சிரஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறவன், ஆயுள் ஐஸ்வர்யம் வித்தை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் வேதாந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான். குரு வக்ர காலத்தில் நற்பலன்களைப் பெற, மேற்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

    நாகதோஷம், ராகு - கேது பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான பரிகாரங்கள் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது.
    ஓம் அனந்தம் வாஸுகிம்
    சேட்சம் பத்மநாபம்
    ஸகம்பலம் ஸங்கபாலம்
    த்ருதராஷ்டிரம்: தட்சகம்
    காளியம்ததா: ஏதானி நவ
    நாமானி சமகாத்மனாம்
    சாயங்காலே படேநித்யம்
    ப்ராதாகாரல விசேஷதக
    நஸ்யவிஷ பயம் நாஸ்தி
    ஸர்வத்ர விஜயூபவேத்

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது.
    ஓம் ஷண்முக பதயே நமோ நம!
    ஓம் ஷண்மத பதயே நமோ நம!
    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
    ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
    ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
    ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
    ஓம் நவநிதி  பதயே நமோ நம!
    ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
    ஓம் நரபதி பதயே நமோ நம!
    ஓம் சுரபதி பதயே நமோ நம!
    ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
    ஓம் ஷடஷர பதயே நமோ நம!
    ஓம் கவிராஜ பதயே நமோ நம!
    ஓம் தபராஜ பதயே நமோ நம!
    ஓம் இகபர பதயே நமோ நம!
    ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
    ஓம் ஜயஜய பதயே நமோ நம!
    ஓம் நயநய பதயே நமோ நம!
    ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
    ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
    ஓம் வல்லீ பதயே நமோ நம!
    ஓம் மல்ல பதயே நமோ நம!
    ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
    ஓம் இஷ்டி பதயே நமோ நம!
    ஓம் அபேத பதயே நமோ நம!
    ஓம் கபோத பதயே நமோ நம!
    ஓம் வியூஹ பதயே நமோ நம!
    ஓம் மயூர பதயே நமோ நம!
    ஓம் பூத பதயே நமோ நம!
    ஓம் வேத பதயே நமோ நம!
    ஓம் புராண பதயே நமோ நம!
    ஓம் ப்ராண பதயே நமோ நம!
    ஓம் பக்த பதயே நமோ நம!
    ஓம் முக்த பதயே நமோ நம!
    ஓம் அகார பதயே நமோ நம!
    ஓம் உகார பதயே நமோ நம!
    ஓம் மகார பதயே நமோ நம!
    ஓம் விகாச பதயே நமோ நம!
    ஓம் ஆதி பதயே நமோ நம!
    ஓம் பூதி பதயே நமோ நம!
    ஓம் அமார பதயே நமோ நம!
    ஓம் குமார பதயே நமோ நம!

    ஓம் சரவண பவ
    ×