என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல முருகனின் அறுபடைவீடுகளை குறிக்கும் ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.
    திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.

    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் சொல்ல, கந்தவேள் கருனையால் எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை :

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை :

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை :

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை :

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை :


    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை :

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை :

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
    நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில் நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது. கீழ்கண்ட மந்திரத்தை சொன்னால் நல்லதே நடக்கும்.

    நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில் நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது. கீழ்கண்ட மந்திரத்தை சொன்னால் நல்லதே நடக்கும்.

    ஓம் நமோ நாரஸிம்ஹாய

    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே

    வஜ்ர தேஹாய வஜ்ராய

    நமோ வஜ்ர நகாய ச

    முதலில் லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலை யில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகிய வற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மன முருகி வழிபட்டு விட்டு பிறகு வழி பாட்டை வீட்டில் தொடர்ந்து கடை பிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    பிரதோஷ நாட்களில் அல்லது தினமும் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    பிரதோஷ நாட்களில் அல்லது தினமும் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.

    சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
    சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
    கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
    கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி
    பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
    பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
    நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
    நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி
    செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
    சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
    மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
    மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி
    அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
    அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
    வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
    வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
    பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
    பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
    வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
    வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி
    கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
    கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
    வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
    விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி
    வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
    வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
    சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
    செவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி
    கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
    குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
    பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
    புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி
    பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்க, செல்வ வளம் பெருக இந்த மந்திரத்தை 3 மாதங்கள் சொல்லி வர வேண்டும்.
    பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்.

    சதுர்புஜம் பாசதரம் கணேசம்
    ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
    லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
    ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
    அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
    லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்
    கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது. தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.
    துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.

    அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே
    இகமும் பரமும் இணையும் இடமே ஈதல் பரமாம் இதயத் தவமே
    உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே
    எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே !

    ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே
    ஒளியே விழியே உயிரே வழியே ஓடும் நதியில் பாடும் அலையே
    அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே அடியேன் சரணம் சரணம் சரணம் !
    அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே

    தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே
    வேதம் விளையும் வித்தே விளையவே நாதம் பொழியும் நலமே நிலமே
    ஓதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
    அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

    பொய்யா மொழியே பொங்கும் நிலவே பூமிக் குடையின் காவற் பொருளே
    பார்த்தன் பணியும் பாதம் காக்க பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
    மூடர்கள் தமையும் மோகனன் காக்க முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
    வாடும் உயிரை மன்னவன் காக்க தேடும் விழியைத் திருமால் காக்க

    கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
    துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க தூயோன் வருக ! துணையே தருக !
    மாதர் கற்பும் மடவார் நோன்பும் மாயோன் காக்க மலைபோல் வருக !
    தகிடத் தகிடத் தகிடத் தகவென தறிபடு துன்பம் தறிகெட ஓட

    திகிடத் திகிடத் திகிடத் திகிடத் திசைவரு கவலை பசைஇலதாக !
    துருவத் துருவத் துருவத் துருவிடத் தொலையாப் பொருளே அலையாய் வருக !
    நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக கர்மசந் யாசக் களமே வருக !
    ஞானம் யோகம் நல்குவன் வருக ! நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

    அடியேன் துயரம் அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
    பொங்கும் வேலும் புண்ணாக் காது பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
    தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன் தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
    மதுசூதனனே மனிதன் சரணம் ! இருடீ கேச இயலான் சரணம் !

    கீதா சாரிய கிருஷ்ணா சரணம் ! வேதா சாரிய வேந்தே சரணம் !
    தேவகி மைந்தா சிறியேன் சரணம் ! யசோதா குமரா அடியேன் சரணம் !
    உன்னை விட்டொரு உறவுகளில்லை என்னை விட்டொரு இனியவனில்லை
    நம்மை விட்டொரு நண்பர்களில்லை நன்மையில் உன்போல் நாயகனில்லை

    எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,அங்கங்கே நீ அருள் செய வருக !
    கோசலை ஈன்ற குமரா வருக ! கோதையின் மாலை கொண்டவன் வருக !
    ரகுவம் சத்தின் நாயகன் வருக !யதுவம் சத்தின் யாதவன் வருக !
    மதுவை வென்ற மாதவன் வருக !மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

    திருப்பதி யாளும் திருமால் வருக !திருவரங் கத்துப் பெருமாள் வருக
    இராவணன் கொடுமை தீர்த்தாய்துன்பம் இராவணம் எமக்கும் இன்னருள் புரிக
    கம்சன் கொடுமை களைந்தோய் வருக !காலனை வெல்லக் கைவலி தருக !
    நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு

    தண்டைக் காலில் சலங்கை குலுங்க அண்டையில் வந்து அருளே புரிக !
    கௌரவர் தம்மை களத்தில் வென்றாய் கெளரவம் காக்க கண்ணா வருக !
    பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய் படித்தவன் மகிழப் பரமே வருக !
    மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

    சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன் பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
    கொக்கென நின்று குறிவைத் திருந்தேன அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
    இக்கணம் என்னை ஏங்க விடாமல்தக்கவனே நீ தயவுடன் அருள்க !
    கல்லாய்ப் போனவள் காலடி பட்டுபெண்ணாய் ஆனது பிழையே யன்று !

    உன்னால் தானே உலகம் இயக்கம் ! கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
    கண்ணனி லாமல் கடவுளுமில்லை கண்ணனி லாமல் கவிதையுமில்லை
    கண்ணனி லாமல் காலமுமில்லை கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
    எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

    சத்திய நாதன் தாள்களை மறவேன் தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
    உன்னை நம்பி உனையே சேர்ந்தால் பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
    உலகில் போதும் ஒருமுறை மூச்சு ! உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
    இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

    பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல் மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
    இல்லை என்றொரு நாளில் லாமல் இன்னும் என்னும் ஆசை வராமல்
    தொல்லை என்பது துளியுமில்லாமல் தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
    முதுமைத் துயரம் மூண்டு விடாமல் படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்

    சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
    என்றும் பதினா றிளமை வழங்கு ! இப்பணி தொடர அற்புதம் காட்டு !
    தளரா மேனியில் சக்தியைக் கூட்டு தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
    வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

    உலகில் ஒருவன் உத்தமன் இவனெனஉயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
    சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர் சரிசரி சரியெனத் தலையை யசைக்க
    பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க மளமள மளவென மனையிருள் நீங்க
    கலகல கலவென காசுகள் சேர தளதள தளவென தர்மம் தழைக்க

    வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
    ஐயா சரணம் சரணம் சரணம் ! அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
    கவசம் கவசம் கவசம் கவசம் ! வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
    கவசம் கவசம் கவசம் கவசம் ! வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

    அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
    அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
    அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
    அவனிடம் எதையும் தருவோம் தருவோம்

    ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...ஜெயஜெய ஜெயஜெய
    ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய...
    வாழ்வில் ஏற்படும் துன்பங்களை மறைய இந்த துதியை தினமும் சொல்லி வந்தால் விரைவில் வாழ்வில் வசந்தம் வீசுவதை காணலாம்.
    ஜெய் ஜெய் ஆஞ்சநேயா !!
    ஜெய் ஜெய் ஹநுமதேயா !!
    காரிய சித்தி நல்கும் ஹனுமத் பஞ்சரத்னம்!!

    வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
    ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

    பொருள் :

    எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகியவற்றை அடைவந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

    ஜெய் ஹநுமதேயா !!
    சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும்.
    சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.

    கவுமாரி பாடல் :

    ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்
    சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரி
    ஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றி
    ஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.

    காயத்ரி :

    ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
    சக்தி ஹஸ்தாயை தீமஹி;
    தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

    தியான ஸ்லோகம் :

    சதுர்புஜா த்ரிநேத்ரா
    சரக்த வஸ்த்ர சமந்விதா;
    ஸர்வாபரண ஸம்யுக்தா
    வாசிகா பக்த காகுடீ;
    ஸத்தி குக்குட ஹஸ்தாச
    வரதாபய பாணிநீ;
    மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
    உதும்பர த்ருமாஸ்ரிதா
    கௌமாரீ சேதி விக்யர்தா,
    நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

    மூல மந்திரம் :

    ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:

    மன தைரியம் பெறுவதற்கு உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம் என்னவென்று காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார் என்று பார்க்கலாம்.
    ""புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்''

    ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை இயன்ற போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.
    இந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி தியான காயத்ரியை 108 முறை சொன்னால் நல்லது. முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
    தியான காயத்ரி :

    ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
    தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

    துதி :
     
    ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

    பொருள் : ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.

    இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிட்டால் 18 முறையாவது சொல்ல வேண்டும், முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
    பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹாதேவாய தீமஹி
    தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சதாசிவாய வித்மஹே
    ஜடாதராய தீமஹி
    தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
    அதிசுத்தாய தீமஹி
    தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் கௌரீநாதாய வித்மஹே
    சதாசிவாய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் சிவோத்தமாய வித்மஹே
    மஹோத்தமாய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் தன்மஹேசாய வித்மஹே
    வாக்விசித்தாய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் மஹாதேவாய வித்மஹே
    ருத்ரமூர்த்யே தீமஹி
    தன்னோ சிவ ப்ரசோதயாத்

    ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
    தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
    மஹா தேவாய தீமஹி
    தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்
    ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்
    1. ஓம் அறிவுருவே போற்றி
    2. ஓம் அழிவிலானே போற்றி
    3. ஓம் அடைக்கலமே போற்றி
    4. ஓம் அருளாளனே போற்றி
    5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
    6. ஓம் அடியாரன்பனே போற்றி
    7. ஓம் அகத்துறைபவனே போற்றி
    8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    9. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அபயகரத்தனே போற்றி

    11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
    12ஓம் ஆன்மீகநாதனே போற்றி
    13. ஓம் ஆச்சாரியனே போற்றி
    14. ஓம் ஆசாரக்காவலே போற்றி
    15. ஓம் ஆக்கியவனே போற்றி
    16. ஓம் ஆதரிப்பவனே போற்றி
    17. ஓம் ஆதி பகவனே போற்றி
    18. ஓம் ஆதாரமே போற்றி
    19. ஓம் ஆழ்நிலையானே போற்றி
    20. ஓம் ஆனந்த உருவே போற்றி
    21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
    22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி
    23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
    24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி
    25. ஓம் உய்யவழியே போற்றி
    26. ஓம் ஊழிக்காப்பே போற்றி
    27. ஓம் எந்தையே போற்றி
    28. ஓம் எளியோர்க்காவலே போற்றி
    29. ஓம் ஏகாந்தனே போற்றி
    30. ஓம் ஏடேந்தியவனே போற்றி
    31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

    32. ஓம் ஓங்கார நாதமே போற்றி
    33. ஓம் கயிலை நாதனே போற்றி
    34. ஓம் கங்காதரனே போற்றி
    35. ஓம் கலையரசே போற்றி
    36. ஓம் கருணைக்கடலே போற்றி
    37. ஓம் குணநிதியே போற்றி
    38. ஓம் குருபரனே போற்றி
    39. ஓம் சதாசிவனே போற்றி
    40. ஓம் சச்சிதானந்தமே போற்றி
    41. ஓம் சாந்தரூபனே போற்றி

    42. ஓம் சாமப்பிரியனே போற்றி
    43. ஓம் சித்தர் குருவே போற்றி
    44. ஓம் சித்தியளிப்பவனே போற்றி
    45. ஓம் சுயம்புவே போற்றி
    46. ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
    47. ஓம் ஞானமே போற்றி
    48. ஓம் ஞானியே போற்றி
    49. ஓம் ஞானநாயகனே போற்றி
    50. ஓம் ஞானோபதேசியேபோற்றி
    51. ஓம் தவசீலனே போற்றி

    52. ஓம் தனிப்பொருளே போற்றி
    53. ஓம் திருவுருவே போற்றி
    54. ஓம் தியானேஸ்வரனே போற்றி
    55. ஓம் தீரனே போற்றி
    56. ஓம் தீதழிப்பவனே போற்றி
    57. ஓம் துணையே போற்றி
    58. ஓம் தூயவனே போற்றி
    59. ஓம் தேவாதிதேவனே போற்றி
    60. ஓம் தேவருமறியா சிவனே போற்றி
    61. ஓம்நன்னெறிக்காவலே போற்றி

    62. ஓம் நல்யாக இலக்கே போற்றி
    63. ஓம் நாகப்புரியோனே போற்றி
    64. ஓம் நான்மறைப்பொருளே போற்றி
    65. ஓம் நிலமனே போற்றி
    66. ஓம் நிறைந்தவனே போற்றி
    67. ஓம் நிலவணியானே போற்றி
    68. ஓம் நீறணிந்தவனே போற்றி
    69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
    70. ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
    71. ஓம் பசுபதியே போற்றி

    72. ஓம் பரப்பிரம்மனே போற்றி
    73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி
    75. ஓம் பேறளிப்பவனே போற்றி
    76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
    77. ஓம் பொன்னம்பலனே போற்றி
    78. ஓம் போற்றப்படுவனே போற்றி
    79. ஓம் மறைகடந்தவனே போற்றி
    80. ஓம் மறையாப் பொருளே போற்றி
    81. ஓம் மஹேசுவரனே போற்றி

    82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
    83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
    84. ஓம் மாமுனியே போற்றி
    85. ஓம் மீட்பவனே போற்றி
    86. ஓம் முன்னவனே போற்றி
    87. ஓம் முடிவிலானே போற்றி
    88. ஓம் முக்கண்ணனே போற்றி
    89. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
    90. ஓம் முனீஸ்வரனே போற்றி
    91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி

    92. ஓம் மூலப்பொருளே போற்றி
    93. ஓம் மூர்த்தியே போற்றி
    94. ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
    95. ஓம் மோன சக்தியே போற்றி
    96. ஓம் மௌன உபதேசியே போற்றி
    97. ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
    98. ஓம் யோக நாயகனே போற்றி
    99. ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
    100. ஓம் யம பயமழிப்பவனே போற்றி
    101. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

    102. ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
    103. ஓம் வித்தகனே போற்றி
    104. ஓம் விரிசடையனே போற்றி
    105. ஓம் வில்லவப்பிரியனே போற்றி
    106. ஓம் வினையறுப்பவனே போற்றி
    107. ஓம் விஸ்வரூபனே போற்றி
    108. ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி
    முருகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை செவ்வாய் கிழமை, கிருத்திகை, சஷ்டி தினங்களில் சொல்லி வந்தால் முருகனின் அருளை பெறலாம்.
    ஓம் அழகா போற்றி
    ஓம் அறிவே போற்றி
    ஓம் அரன் மகனே போற்றி
    ஓம் அயன்மால் மருகா போற்றி
    ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
    ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
    ஓம் பன்னிருகை வேலவா போற்றி
    ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
    ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
    ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
    ஓம் இடர் களைவோனே போற்றி
    ஓம் உமையவள் மகனே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    ஓம் ஓம்கார சொருபனே போற்றி
    ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
    ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
    ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
    ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
    ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
    ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
    ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
    ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
    ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
    ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
    ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
    ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
    ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
    ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
    ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
    ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
    ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
    ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
    ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
    ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
    ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
    ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கதிர் வேலவனே போற்றி
    ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
    ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
    ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
    ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி
    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
    ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
    ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
    ஓம் மருதமலை இறைவா போற்றி
    ஓம் மயில் வாகனனே போற்றி
    ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
    ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
    ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
    ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
    ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
    ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
    ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
    ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
    ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
    ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
    ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
    ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
    ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
    ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
    ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
    ஓம் சரவணபவ சண்முகா போற்றி
    ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
    ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
    ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
    ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
    ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
    ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
    ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
    ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
    ஓம் யோக சித்தியே அழகே போற்றி
    ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
    ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
    ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
    ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
    ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
    ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
    ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
    ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
    ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
    ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
    ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
    ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
    ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
    ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
    ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
    ஓம் துதிபுரி அன்ªபன் துணையே போற்றி
    ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
    ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
    ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
    ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
    ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
    ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
    ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
    ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
    ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
    ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
    ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
    ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
    ஓம் மருதமலை ஆண்டவா போற்றி
    ஓம் போற்றி... போற்றி... மருதமலை வேலவா போற்றி

    ×