என் மலர்
இஸ்லாம்
அன்று முதல் இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் துல்ஹஜ் மாதத்தில் 10-ம் பிறையில் ஓர் ஆட்டை குர்பானி செய்து அந்த நாளை தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
இப்ராகிம் நபிகளை தன் நல்லடியார்களில் ஒருவராக தேர்ந்தெடுத்த பின்பும் கூட அவருக்கு அதிகமான சோதனைகளை கொடுத்தான், அல்லாஹ். மற்ற நபிகளை விடவும் இப்ராகிம் நபிகளுக்கு வழங்கப்பட்ட சோதனைகள், எந்த மனிதனும் நிறைவேற்ற தயங்கும் அளவிற்கு மிகவும் கடுமையானது.
இந்த சோதனைகள் அனைத்தும் உள்ளுணர்வு மற்றும் கனவுகள் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், இறைக்கட்டளையை எந்த சந்தேகமும் இன்றி அப்படியே அவர் ஏற்றுக்கொண்டார். ஏன், எதற்கு என்று எந்தக்கேள்வியும் கேட்கவில்லை.
அதனால் தான் இப்ராகிம் நபிகளை, ‘தன் உற்ற தோழன்’ என்று அல்லாஹ் அழைத்து அவருக்கு பெருமை சேர்த்தான். அத்தனை சிறப்பு மிக்க இப்ராகிம் நபிகள் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
‘என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்’ (திருக்குர்ஆன் 37:100)
இந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஒரு மகனை (இஸ்மாயில்) வாரிசாக வழங்கினான். வயது முதிர்ந்த நிலையில் பெரும் அருட்கொடையாக மகனைப்பெற்ற இப்ராகிம் நபிகள் மகிழ்ந்திருந்தார்கள். அப்போது இறைவனின் சோதனை இறங்கியது.
‘பால்குடி மாறா அந்த குழந்தையை பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்து விடு’ என்று இறைக்கட்டளை வந்தது. உடனே அதற்கு அடிபணிந்தார் இப்ராகிம் நபிகள். இதன் மூலம் நமக்கு என்றும் வற்றாத ஜீவ ஊற்று ஜம் ஜம் ஊற்று கிடைத்தது. சபா-மர்வா குன்றுகளிடையே ஓடும் ‘தொங்கோட்டம்’ என்ற சிறப்பு அமல் கிடைத்தது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் கூட ஹாஜிகள் அந்த கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகள் கடந்து மீண்டும் இப்ராகிம் நபிகள் சிரியாவிலிருந்து புறப்பட்டு தன் குடும்பத்தை மீண்டும் காணச்செல்கிறார்கள். அருமை பாலகன் இஸ்மாயிலோடு கொஞ்சிக் குலவி சிறிது காலம் வாழ்ந்தார்கள். மகனும் நடந்து திரிந்து விளையாடும் பருவத்தை எட்டினான். அப்போது மறுபடியும் அல்லாஹ்வின் கட்டளை பிறக்கிறது. இதுபற்றி தன் மகனிடமே அவர் கேட்டார். ‘என் அருமை மைந்தனே நான் உன்னை என் கை கொண்டு அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் கனவு கண்டேன். இதைப்பற்றி நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்...?’ (திருக்குர்ஆன் 37:102).
மகன் கேட்கின்றார்: ‘தந்தையே! இது இறைவனின் கட்டளை என்று உறுதியாகத் தெரியுமா?’.
‘ஆம் நான் மெய்யாகவே கனவு கண்டேன்’, என்றார் தந்தை.
‘அப்படியானால் நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வே எனக்கு போதுமானவன். எல்லா செயலாக்கங்களும் அவன் கட்டளைப்படியே நடக்கின்ற போது, இதுவும் அல்லாஹ்வின் எண்ணப்படியே நன்றாகவே நடக்கும்.
இதை திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘என்னருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் அதை சகித்துக்கொண்டு உறுதியாய், இருப்பவனாகவே நீங்கள் என்னை காண்பீர்கள்’ என்று கூறினார். (திருக்குர்ஆன் 37:102)
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற நாடிய இப்ராகிம் நபிகள், அருமை மகனை அழைத்துக் கொண்டு சற்று தூரமான இடத்திற்கு சென்றார். இதைக்கண்டு சைத்தான் பொறாமை கொண்டான். அவர்களை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஹாஜரா அம்மையாரிடம் ஜிம்ரத்துல் உலா என்ற இடத்தில்சென்று, ‘அன்னையே! உன் கணவர் இப்ராகிம் அருமைச் செல்வன் இஸ்மாயிலை அல்லாஹ்விற்காக பலியிடப் போகிறார். உடனே சென்று அவர்களை தடுத்து நிறுத்து’ என்று சொன்னான்.
அன்னை ஹாஜராவோ, ‘என் கணவர் தவறு செய்யக்கூடியவர் அல்ல. அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் செயல் படுவதை நானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்’ என்று பதில் உரைத்தார்கள். மீண்டும், மீண்டும் சைத்தான் அவர்களைத் தூண்டவே அருகில் கிடந்த கற்களை எடுத்து அவன் மீது வீசி துரத்தினார்கள்.
தந்தையும் தனயனும்ஜிம்ரத்துல் உஸ்தா என்ற இடத்தை அடைந்த போது, சைத்தான் இஸ்மாயில் நபிகளை அணுகி, ‘நீயோ பச்சிளம் பாலகன், உன் தந்தை இப்ராகிம் ஈவு இரக்கமின்றி உன்னை அறுத்து பலியிடுவதற்காக அழைத்துச் செல்கிறார். அவரது கட்டளைக்கு கீழ்படியாதே. இங்கிருந்து ஓடி தப்பித்துக் கொள்’ என்றான்.
‘என்னுடைய தந்தை, அல்லாஹ்வின் கட்டளையை தெளிவாக எடுத்துச் சொல்லி, என்னுடைய அனுமதியைப் பெற்றே என்னை அழைத்துச் செல்கிறார்கள். எனவே என்னை விட்டு அகன்றுவிடு’ என்றபடி சைத்தான் மீது கல்லால் எறிந்து விரட்டினார்கள்.
அவர்கள் இருவரும் சற்று தள்ளி நடந்து ஜிம்ரத்துல் அகபா என்ற இடத்தை அடைந்த போது, சைத்தான் இப்ராகிம் நபிகளிடம் வந்து, ‘இப்ராகிமே! ஏதோ நீங்கள் கனவு கண்டதாக சொல்கிறீர்கள். அல்லாஹ் எங்காவது தன் அடியார்களை உயிரோடு அறுத்து பலியிடச் சொல்வானா? உங்கள் சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட மனக் குழப்பமே இதற்கு காரணம். அருமைப் பிள்ளையை அறுத்து பலியிடாதீர்கள்’ என்று அவர்கள் மனதில் ஊசலாட்டத்தை விதைத்தான்.
அல்லாஹ் எனக்கு அளித்த கட்டளையில் நான் தெளிவாக இருக்கின்றேன். எனவே என்னை நீ வழிகெடுக்க முடியாது. என்னை விட்டு ஓடிவிடு என்று சொல்லியவர்களாக அவனை கல்லால் எறிந்தார்கள்.
அன்னையும், தந்தையும், பிள்ளையும் எந்த அளவிற்கு அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாய் இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. அந்த செயலை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், ஹஜ் கடமைகளில் ஒன்றாக சைத்தான் மீது மூன்று இடங்களில் கல் எறிவதையும் அங்கீகரித்தான்.
குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், இப்ராகிம் நபிகள், தன் மகனை மண்ணில் கிடத்தினார்கள். அப்போது இஸ்மாயில் நபிகள், ‘அருமை தந்தையே என்னை முகங்குப்புற படுக்க வையுங்கள். ஏனெனில், நீங்கள் அறுப்பதற்காக கத்தியை கையில் எடுக்கும் போது என் முகத்தை பார்க்க நேரிட்டால் உங்கள் மனம் இளகி அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் விட்டு விடுவீர்களோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்றார்.
எப்பேற்பட்ட இறையச்சம். அவர்கள் சொல்லியபடியே முகங்குப்புற படுக்க வைத்து கூரிய கத்தியால் கழுத்தில் ஒட்டினார்கள். கத்தி அறுக்க மறுக்கிறது. கோபத்தோடு அருகில் இருந்த பாறையில் அடிக்கிறார்கள். பாறை இரண்டாக பிளவு படுகிறது. மீண்டும் அறுக்க முயற்சித்தும் முடியவில்லை. காரணம் அல்லாஹ்வின் உத்தரவு இருந்தால் மட்டுமே கத்தியால் அறுக்க முடியும். கத்தி அறுப்பதற்காகவே படைக்கப்பட்டது. இருந்தாலும் அறுப்பதற்கும், அல்லாஹ்வின் கட்டளை வேண்டும்.
அப்போது இறைகட்டளை இறங்கியது. ‘இப்ராகிமே நாம் உம்மின் இறைபக்தியை ஏற்றுக்கொண்டோம். இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆடு அனுப்பியுள்ளோம். அதனை அறுத்து உங்கள் கனவை பூர்த்தி செய்யுங்கள்’ என்றான் அல்லாஹ்.
அதுமட்டுமல்லாமல் அன்று முதல் இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் துல்ஹஜ் மாதத்தில் 10-ம் பிறையில் ஓர் ஆட்டை குர்பானி செய்து அந்த நாளை தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.

அடுத்தவரைத் தண்டிக்க அதிகாரமில்லாத நாம், தவறு செய்தவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம்? நபி வழியில் நடப்பதாகச் சொல்லும் நமது நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன?, சிந்தித்துப்பார்ப்போம்.
அறிஞர் அலி அஸ்ஸல்லாபி அவர்கள் உண்மை முஸ்லிமுக்கும் கடும் போக்கைக் கடைப் பிடிக்கும் முஸ்லிமுக்குமான வேறுபாட்டை அழகாக இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகின்றார்:
உண்மை முஸ்லிம்: தமது இறைநம்பிக்கை குறித்து யோசித்தவண்ணம் இருப்பார்.
கடும் போக்கைக் கடைப்பிடிப்பவர்: அடுத்தவரின் இறைநம்பிக்கை குறித்தே எப்போதும் கவலைப்படுவார்.
உண்மை முஸ்லிம்: தானும் அடுத்தவரும் எவ்வாறேனும் சுவனம் சென்றுசேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்வார்.
கடும் போக்கைக் கடைபிடிப்பவர்: ‘இவர் நரகவாசி’ என்று தீர்ப்பளித்தவாறு அடுத்தவரை நரகத்திற்கு அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்.
உண்மை முஸ்லிம்: பிறருடைய தவறுகளை மன்னிப்பதற்கும் சகித்துக்கொள்வதற்கும் காரணங் களைத் தேடுவார்.
கடும் போக்கைக் கடைப்பிடிப்பவர்: ‘வழிகேடர்’ என்று தீர்ப்பு கொடுப்பதற்காகவும், ‘விமர்சனம்’ என்ற பெயரில் பொதுவெளியில் அவர்களைக் கேவலப் படுத்துவதற்காகவும், மானத்தை வாங்குவதற்காகவும் பிறர் குறித்த தவறுகளைத் தேடுவார்.
மார்க்க விவகாரங்களோ, உலக விவகாரங்களோ எதுவாக இருந்தாலும், சகிப்புத்தன்மை என்பதெல்லாம் மலையேறி காலம் ஆகிவிட்டது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்பதை சிலபோது நாம் மறந்துபோகின்றோம். தவறு செய்த மனிதரிடம் கடுமையாக நடந்துகொள்வதை மட்டும் மறக்காமல் இருக்கின்றோம்.
கூறுங்கள், இங்கே யார் தான் உத்தமர்? தவறிழைப்பது மனித இயல்பு. அப்படி ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரிடம் கடுமையாக நடந்துகொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவரைக் கேவலப்படுத்தி, எவ்வளவு தூரம் இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவரை இழிவுபடுத்தி, பொதுத்தளத்தில் இருந்தே ஓட ஓட விரட்டி.. மூலையில் முடக்குவது ஒரு வகை வெறித்தனமான மனோபாவமாகவே இருக்கிறது.
நான்.. நீ.. என வேறுபாடு இன்றி அனேகமாக அனைவரிடமும் இந்தக் குணம் குடிகொண்டுள்ளது.
குற்றவாளிகளைப் பகிரங்கப்படுத்தாமல் இருத்தல் சிலபோது முழுமையான சிகிச்சையாக அமையலாம். மோசமான சூழ்நிலைகளால் உந்தப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர் பின்னர் அதிலிருந்து விடுபட முனைவதற்கும், மானசீகமாக பாவமீட்சி (தவ்பா) செய்வதற்கும், தூய்மையான வாழ்வைத் தொடங்க முயல்வதற்கும் அது வாய்ப்பை ஏற் படுத்திக் கொடுக்கலாம்.
ஆகவேதான், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக பகிரங்கப்படுத்தாமல் மறைத்து வைப்பதை ஷரீஅத் சட்டபூர்வமாக்கி உள்ளது.
ஸயீத் இப்னுல் முஸய்யப் அவர்கள் அறிவிப்பதாவது: ஹஸ்ஸால் என்ற பெயர் கொண்ட ஒரு நபித்தோழரிடம் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக நான் அறிந்துள்ளேன். வேறொரு நபர் குறித்து விபச்சாரப் புகார் கூறியவராக நபிகளாரிடம் இவர் வந்தார். “எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள்” என்ற திருக்குர்ஆன் வசனம் (24:4) இறங்குவதற்கு முன்பு இது நடைபெற்றது.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஹஸ்ஸால், நீர் அவரை உமது ஆடையால் மறைத்து வைத்திருந்தால் அதுவல்லவா உமக்குச் சிறந்ததாக இருந்திருக்கும்.”
யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்: யஸீத் பின் நுஐம் பின் ஹஸ்ஸால் அல்அஸ்லமி அவர்கள் அமர்ந்து இருந்த சபையில் இந்த ஹதீஸை நான் கூறினேன். அப்போது யஸீத் கூறினார்: “ஹஸ்ஸால் எனது பாட்டனார் தான். இந்த ஹதீஸ் உண்மைதான்” (முஅத்தா மாலிக்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாவது:
“எவர் தமது முஸ்லிமான சகோதரருடைய தவறை மறைத்துக்கொள் கிறாரோ, அவருடைய தவறை மறுமைநாளில் அல்லாஹ்வும் மறைத்துக்கொள்வான். எவர் தமது சகோதரரின் தவறை வெளிப்படுத்துகிறாரோ, சொந்த வீட்டிலேயே கேவலப்படும் வண்ணம் அவருடைய தவறை அல்லாஹ்வும் வெளிப்படுத்துவான்.” (இப்னுமாஜா)
மனிதர்களுக்கு என்று சில கண்ணியங்கள் உள்ளன. துப்பறிவதன் மூலம் அவற்றைக் கீறிக்கிழித்து வீசுவது கூடாது. அவர்களுடைய ரக சியங்களைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து செல்வது கூடாது. யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் பாவங் களைச் செய்பவர்களாக அவர்கள் இருந்தாலும் சரியே. ஒளித்து மறைத்து தவறு செய்துகொண்டிருக்கும் காலம்வரை அவற்றை வெளிப் படுத்துவது கூடாது.
உக்பத் பின் ஆமிர் (ரலி) அவர்களுடைய எழுத்தாளராக இருந்த அபுல் ஹைஸம் என்பவர் கூறுவதாவது:
உக்பத் பின் ஆமிர் (ரலி)அவர்களிடம் நான் கூறினேன்: “நம்முடைய சில அண்டை வீட்டார் மது அருந்துகின்றனர். அவர்களைக் கைது செய்வதற்காக நான் காவல் அதிகாரிகளை அழைக்கட்டுமா?”.
உக்பத் பின் ஆமிர் (ரலி) கூறினார்: “வேண்டாம்! அவர்களுக்கு உபதேசம் செய். அவர்களைப் பயமுறுத்து”.
அபுல் ஹைஸம்: “அவர்களை நான் எவ்வளவோ பயமுறுத்தியும் அவர்கள் பயப்படவில்லை. ஆகவே அவர்களைக் கைது செய்வதற்காக காவலர்களை கூப்பிடட்டுமா?”.
உக்பா (ரலி) கூறினார்: “உனக்கு நாசம், அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக நான் கேட்டுள்ளேன்: “ஒரு ரகசியத்தை மறைத்து வைப்பவர் மண்ணறையில் (கப்ர்) உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமிக்கு உயிர் கொடுத்தவரைப் போன்றாவார்”. (அபூதாவூத், நஸாயி, இப்னு ஹிப்பான், ஹாகிம்)
அனைத்து விவகாரங்களுக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் நாம், இந்த விவகாரத்திலும் பெருமானாரின் வழிகாட்டுதலைத்தானே எடுத்திருக்க வேண்டும். அதுதானே முறை.?
ஆம், தவறிழைத்தவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் வரலாறு அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளது. இதோ அந்த நிகழ்வு.
மக்காவை வெற்றிகொள்ள நபி (ஸல்) அவர்கள் நாடியபோது, மக்கத்துக் குறைஷிகளுக்குத் தெரியாமல் ரகசியமாக அதற்காகத் தயாரானார்கள். ஆனால் ஹாதிப் பின் அபீ பல்தஅ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை ஒரு கடிதம் மூலம் ரகசியமாக மக்காவுக்குத் தெரிவிக்க முற்படுகிறார். ஆயினும் அலி (ரலி) அவர்கள் மூலம் அந்தக் கடிதம் பெறப்படுகிறது. அந்த நபித்தோழரும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்படுகிறார்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு உமர் (ரலி) அவர்கள் வாளை உருவி, “இறைத் தூதரே! இவர் நயவஞ்சகனாகி விட்டார். இவரைக் கொலைசெய்ய அனுமதி தாருங்கள்” என்று கேட்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?
“உமரே! இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர். பத்ருப் போரில் கலந்துகொண்டவரின் மகிமை குறித்து உமக்கு என்ன தெரியும்? இவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறினான்: என்ன வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தையும் நான் மன்னித்துவிட்டேன்”.
நடந்த தவறுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஅ (ரலி) கூறிய விளக்கமும், அவரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னித்தமையும் தனி வரலாறு. ஆயினும் செய்த செயல் என்னவோ பெரும் தவறுதான். மிகப் பெரிய துரோகச் செயல்தான். ஆகவேதான் உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்டார். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் அந்த தோழருக்காக எவ்வளவு தூரம் பரிந்து பேசுகின்றார்கள் என்பதைப் பாருங்கள்.
மக்கள் மன்றத்தில் அவரைக் கேவலப்படுத்தவோ, இழிவுபடுத்தவே செய்யவில்லை. தண்டிக்கும் ஆற்றலும் அதிகாரமும் இருந்த பின்னரும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவரை மன்னித்து விட்டுவிட்டார்கள். இதுதான் நபி வழி.
ஆனால், அடுத்தவரைத் தண்டிக்க அதிகாரமில்லாத நாம், தவறு செய்தவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம்? நபி வழியில் நடப்பதாகச் சொல்லும் நமது நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன?, சிந்தித்துப்பார்ப்போம்.
நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் தெளிவாக அறிவைப்பெற்று, நடைமுறைப்படுத்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், ஈருலக நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்வோமாக.
இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளை நிர்ணயித்த அல்லாஹ் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய வரைமுறைகளையும் வகுத்துச் சொன்னான். தொழுகை என்பது கட்டாய கடமை. எந்த நிலையிலும் அதனை தவிர்ப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை.
இது எந்த அளவிற்கு ஆழமாக வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது என்றால்; நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் விழித்துக்கொண்டிருக்கும் போது, அவன் தன் கண்களை அசைத்து ஜாடை செய்தாகிலும் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதே.
ஆனாலும் அந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால், உள்ளம் தூய்மையாகவும், உடல் தூய்மையாகவும், தொழும் இடம் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. அல்லாஹ் கட்டளையை அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
உடலைச் சுத்தம் செய்வதற்கு ‘ஒளு’ என்ற முறையையும் கற்றுத்தருகிறான். எப்படி அந்த ‘ஒளு’ என்ற சுத்தம் செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக இந்த வசனத்தில் குறிப்பிட்டு உள்ளான்.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் அதற்கு முன்னர் உங்கள் முகத்தையும் முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இருபாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் கையில் நீரைத் தொட்டு உங்கள் தலையைத் தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் கை கால்களை மட்டும் கழுவினால் போதாது, உடல் முழுவதையும் கழுவி தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜலம் பாதைக்கு சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய தண்ணீரை நீங்கள் பெறவில்லைஎனில் தயம்மம் செய்து கொள்ளுங்கள். அதாவது சுத்தமான மண்ணை உங்கள் கைகளால் தொட்டு அதைக் கொண்டு உங்கள் முகங்களையும் கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கஷ்டத்தை தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும் அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும் தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். இதற்காக நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக.” (திருக்குர்ஆன் 5:6)
தண்ணீரைக் கொண்டு தான் அழுக்கை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னவன், தண்ணீர் கிடைக்காத நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று “தயம்மம்” என்ற முறையைக் கற்றுத் தந்தான். இதற்கான ஒரு வரலாற்று பின்னணியும் உண்டு.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூர் பயணம் சென்ற போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் தன் நண்பர்கள் சூழ்ந்த சிறு குழுவையும் சேர்த்துக் கொண்டார்கள். இந்த பயணத்தின் போது அன்னை ஆயிஷா (ரலி) தங்களின் உறவினர் அஸ்மா (ரலி) அவர்களிடம் ஒரு முத்து மாலை ஒன்றை இரவலாக வாங்கி அணிந்து கொண்டார்.
பயணத்தின் போது வழியில் அன்னை ஆயிஷா (ரலி) அணிந்திருந்த முத்துமாலை எங்கேயோ தவறி விழுந்து விட்டது. இரவல் வாங்கிய மாலையாயிற்றே, இதயம் பதை பதைத்துப் போனார்கள். அண்ணல் எம் பெருமானாரிடம் செய்தி சொல்லிய போது அத்தனை சஹாபாக்களும் முத்துமாலையைத் தேடி கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டினார்கள். எங்கும் தேடியும் மாலை கிடைக்கவில்லை. இரவும் வந்து விட்டது. தொழுகையின் நேரமும் நெருங்கி விட்டது. அடர்ந்த பாலைவனம், அங்கே தண்ணீர் கிடைப்பதற்கோ எந்த வழியும் இல்லை. கைவசம் இருப்பதோ தாகம் தீர்ப்பதற்கு மட்டும் கொஞ்சம் தண்ணீர். தொழுகைக்காக ‘ஒளு’ (சுத்தம்) செய்ய வேண்டும். நிர்பந்தமான நிலைமை.
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அப்படியே ‘ஒளு’ இல்லாமலேயே தொழுகையை நடத்தினார்கள். அவர்கள் படும் சிரமத்தை கவனித்துக் கொண்டிருந்த அல்லாஹ், மண்ணால் சுத்தம் செய்யும் ‘தயம்மம்’ என்ற முறையைச் சொல்லித் தந்து இந்த வசனத்தை இறக்கினான்.
‘தயம்மம்’ என்பது சுத்தமான மண்ணைத் தொட்டு அதனைத் தட்டிய பின் தன் முகத்தையும், இரண்டு கைகளையும் தடவிக் கொள்ள வேண்டும். இதனால் உடல் சுத்தம் அடைந்து விடும். பின்னர் தொழுகையை நிறைவேற்றலாம்.
அன்னை ஆயிஷா (ரலி) மூலம் இது போன்ற ஒரு நிகழ்வை நிகழ்த்தி காட்டி ‘தயம்மம்’ என்ற ஒரு முறையை உலகுக்கு எடுத்துச் சொல்லவே அல்லாஹ் நாடினான். எந்த ஒரு செயலுக்கும் ஒரு நன்மை அமைந்திருக்கும் என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
‘தயம்மம்’ செய்வதிலும் சில சந்தர்ப்ப நிர்பந்தங்களை எப்படி கையாள வேண்டும் என்றும் சில நிகழ்வுகள் மூலம் சொல்லித் தருகிறான் இறைவன்.
ஒரு முறை ஜலாஸில் யுத்தத்திற்கு அம்ரு இப்னுஆஸ் (ரலி) தலைமையேற்று சென்றிருந்தார். போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் இடையில் ஓரிடத்தில் தங்கினார்கள். மறுநாள் காலை பஜ்ர் தொழுகையை தளபதி தான் அமீராக இருந்து தொழ வைக்க வேண்டும். அப்போது காலையில் குளிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. தண்ணீர் இல்லாத நிலையில் குளிக்காமலேயே அவர் தொழுகையை நடத்தினார்.
படை மதீனாவை வந்து அடைந்ததும் அண்ணல் நபிகளிடம் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் செயல் குறித்து புகார் செய்யப்பட்டது. நபிகளார் விசாரணை செய்து நிலைமையை சரிவர புரிந்து கொண்டார்கள். “எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் போது எல்லா செயல்களும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று சொல்லி விட்டு ‘தயம்மம்’ செய்யும் முறையை கற்றுக் கொடுத்தார்கள்.
இதுபோல இன்னொரு நிகழ்வு குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள். இது போன்று ஒரு போர் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் சஹாபாக்கள். ஓரிடத்தில் இரவில் தங்கிய போது ஒரு சஹாபாவிற்கு தூக்கத்தில் அசுத்தம் செய்யும் நிைலமை ஏற்பட்டு விட்டது. கடும் குளிர் காலம். தண்ணீர் நிறையவே இருக்கிறது. ஆனால் தண்ணீர் மிகவும் உறைந்த நிலையில் இருந்தது. அவர் உடலிலோ போரில் ஏற்பட்ட காயங்கள் இருந்தது. அதில் தண்ணீரை ஊற்றி குளித்தால் உயிருக்கு ஆபத்தான நிைலமை ஏற்பட்டு விடும். அவரும் தன் சக தோழர்களுடன் ஆலோசிக்கிறார். “இந்த நிலையில் குளிக்காமல் தொழலாமா?” என்று அவருக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே குளிக்காமலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டார்.
இந்த நிகழ்ச்சியும் அண்ணல் நபிகள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர்கள் அப்போதும் ‘தயம்மம்’ பற்றியே சஹாபாக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
‘தயம்மம்’ செய்வது சுத்தமான மண்ணைத் தொட்டு மட்டுமே செய்ய வேண்டும். சிலர் விவரம் தெரியாமல் சுவற்றில் கைகளைத் தொட்டு தயம்மம் செய்வது கூடும் என்று வாதிடுகிறார்கள்.
அதற்கு ஆதாரமாக ரஸூலுல்லாஹ் ஒரு முறை ஒரு வீட்டில் சுவரைத் தொட்டு தயம்மம் செய்தார்கள் என்று சொல்கிறார்கள். கண்மணி நாயகம் நாள் முழுவதுமே ஒளுவோடு இருக்கின்ற தன்மை கொண்டவர்கள்.
ஒரு வேளை இந்த சட்டத்தை உலகிற்குச் சொல்லித் தர வேண்டும் என்பதற்காக அந்த சமயத்தில் அவர்கள் ஒளுவோடு இல்லாமல் இருந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல் அவர்கள் மண் வீட்டின் மண் சுவற்றைத் தொட்டே தயம்மம் செய்தார்கள். எனவே மண்ணைத் தொட்டே தயம்மம் செய்ய வேண்டும் என்பது விதியாக அமைந்துள்ளது.
இந்த வசனத்தின் மூலம் இறைவன் தயம்மம் பற்றிய அத்தனை விதிகளையும் ஒருங்கே சொல்லி விட்டான். தண்ணீர் இல்லாத நிலையில், தண்ணீர் இருந்தும் நிலைமை சரியில்லாத நிலையில் என்று மாறுபட்ட சந்தர்ப்பங்களிலும் தயம்மம் செய்வது எப்படி என்று விளக்கி கூறி விட்டான்.
இது போன்ற இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் தெளிவாக அறிவைப்பெற்று, நடைமுறைப்படுத்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், ஈருலக நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்வோமாக.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி தர்காவில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது.. ஏராளமான வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களின் கூட்டத்தால் ஏர்வாடி தர்கா களை கட்டி உள்ளது.
நேற்று மாலை 4 மணிக்கு யானை, குதிரைகளுடன், மேளதாளங்கள் முழங்க தைக்காவில் இருந்து ஊர்வலமாக சென்று போர்வை எடுக்கும் விழா நடைபெற்றது. அதன்பிறகு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுராகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இன்று அதிகாலை 4 மணிக்கு தர்கா வந்தடைந்தது. தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பக்தர்கள் தங்குவதற்கு தர்காவில் சிறப்பு பந்தல்களும். வளாகத்தில் பல்வேறு இடங்களில் கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையினரின் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 24 மணி நேரம் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் தடையில்லா மின்சாரம் வழங்க மின்துறை அலுவலர்கள் ஏர்வாடியில் முகாமிட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
சமூக விரோதிகள் நட மாட்டத்தை கண்காணிக்கும் வகையில் தர்கா வளாகத்தில் 50-க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தர்கா நிர்வாக அலுவலகத்தில் இருந்தபடியே கண் காணிக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு அல்லது ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்கு துயரமான காலங்களில் துணை நின்று ஆதரவு தந்தால் பெரும் மதிப்பு பெறுவதற்கு அது துணை நிற்கும்.
“ஓ நம்பிக்கையாளர்களே! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்” என்று திருக்குர்ஆன் (5:8) குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் தன் மனதினுள் வெறுப்பை அனுமதிக்கச் செய்து விட்டால் அது அவனின் மனிதப்பண்பை சிறிது சிறிதாக சிதறடித்துவிடும். ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைப்பதும், விஷத்தை கக்குவதும் இன்று அதிகரித்து வருகிறது.
சில தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் என்று பல்வேறு தரப்பிலும் வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது காலமாக இது இருக்கின்றது. வெறுப்பு மனநிலையின் உச்சபட்சமாக சித்ரவதை செய்வது, தாக்கிக்கொள்வது என்பது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற செய்திகள் தினந்தோறும் வந்து கவலையடைய வைக்கின்றன. பிரச்சினை, பதற்றம், தாக்குதல் எனும் கொதிநிலையில் இந்த தேசம் சிக்குண்டுள்ளது. இதற்கு அடிப்படையில் வெறுப்பே பிரதானமாக நிலைகொண்டு நிற்கிறது.
மனிதர்களிடம் பொதுவாக அறிவும், மனிதநேயமும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் மிகுந்திருக்கும். படைப்பினங்களில் சிறந்ததாக மனிதன் இருப்பதற்கு அதுதான் காரணமாக இருக்கிறது. ஆனால் வெறுப்பை திட்டமிட்டு விதைக்கின்றபோது மேற்குறிப்பிட்ட மனிதனின் அனைத்து தன்மைகளும் அவனது மனதிலிருந்து அழிக்கப்பட்டு விடும். அதனால்தான் சகோதரத்துடன் வாழ வேண்டியவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்.
“நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்க மாட்டார். அவ்வாறே வெறுப்பவர்கள் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார்” என்று வெறுப்பதிலும், நேசிப்பதிலும் நியாயமான அணுகுமுறைகளை மேற்கொள்ள இஸ்லாம் வழிகாட்டுகிறது.
அடிப்படையற்ற கோபம்தான் வெறுப்பின் மூலம் மக்களை துண்டாடி வருகிறது. அது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி செல்கிறது. ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தின் மீது கடுமையாக நடந்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றும் மதம் ஒருபோதும் காரணமாக இருந்தது இல்லை; இருப்பதும் இல்லை.
மதத்தை தீவிரமாக பின்பற்றுவதாக காட்டிக் கொள்ளும் சில கயவர்களே காரணமாக இருக்கிறார்கள். ஏனென்றால் அனைத்து மதங்களும் நல்லவைகளை மட்டுமே சொல்கின்றன. அவை களுடைய வார்த்தைகளில் எந்த தவறானவற்றையும் காணமுடியாது.
வெறுப்பிற்கு பின்னிருக்கும் காரணிகளாக பொய்கள், திரித்தல்கள், உளறல்கள், அவதூறுகள் ஆகியவையே இருக்கின்றன. அவற்றை மனதில் போட்டு குழப்பி விடுவதின் மூலம் தேவையற்ற அச்சம் பிறக்கிறது. அந்த அச்சம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் அச்சாணியாக இருக்கின்றது.
“பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரை ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் சகோதரர்களாக இருங்கள்” என்று நபிகள் நாயகம் மனித சமூகத்திற்கு அறிவிக்கின்றார்கள்.
பிறர் மீது கெட்ட எண்ணம் ஏற்படுவதற்கு முதற்காரணம் நம்பிக்கையற்ற தன்மை நிலைக்கொண்டிருப்பதாகும். முதலில் அனைவரும் சகோதரர்கள்; முடிவிலும் அதுவே. அவன் என் சகோதரன் என்ற எண்ணத்தை உள்ளத்தில் ஏற்படுத்திக் கொண்டால் வெறுப்பை விதைக்க நடைபெறும் முயற்சிகள் எந்நாளும் வெற்றிபெறாது.
வெறுப்பு விஷம் போன்றது. அது எல்லோரையும் கொன்றுவிடும். வெறுப்பை விதைப்பவர்கள் தனக்கும், தன் சமூகத்திற்கும் சேர்த்தே தீங்கிழைக்கிறார்கள் என்பதை முதலில் உணர வேண்டியது அவசியம். வெறுப்புகள் நம்மிடம் உள்ள மனித தன்மையை அழித்துவிடும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திடல் வேண்டும்.
“பரஸ்பர ஆதரவையும், நன்மதிப்பையும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்” என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு அல்லது ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்கு துயரமான காலங்களில் துணை நின்று ஆதரவு தந்தால் பெரும் மதிப்பு பெறுவதற்கு அது துணை நிற்கும். ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டால் வெறுப்பு என்கிற நெருப்பு தீப்பற்றாது. நெருப்பை விதைத்து பிரித்தாள நினைப்பவர்களும் தனிமைப்பட்டு போவார்கள்.
வி.களத்தூர் எம். பாரூக்

எந்த அளவிற்கு இஸ்லாம் பரவியதோ, அந்த அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது. எனவே, இருட்டிய பின்னர் தோழர்களை சந்தித்து திருக்குர்ஆன் வசனங்களை நபிகளார் தெரிவித்து வந்தார்கள்.
இஸ்லாத்தின் சுடர் ஒளி அரபு பாலைவனத்திலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரகாசிக்கத் தொடங்கிய காலம். ஏக இறைவன் அல்லாஹ், தனது தூதராக முகம்மது நபி (ஸல்) அவர்களை தேர்ந்து எடுத்து, அவர்களுக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் திருக்குர்ஆன் வசனங்களை அறிவித்து வந்தான்.
எந்த அளவிற்கு இஸ்லாம் பரவியதோ, அந்த அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது. எனவே, இருட்டிய பின்னர் தோழர்களை சந்தித்து திருக்குர்ஆன் வசனங்களை நபிகளார் தெரிவித்து வந்தார்கள்.
‘எத்தனை நாள் தான் பயந்து பயந்து கொள்கை விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருப்பது இதற்கு ஒரு விடிவுகாலம் வராதா?’ என்று நபிகளார் ஏங்கினார்கள். இதையடுத்து அவர்கள் ஏக இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
“இறைவா, இஸ்லாமிய கொள்கை களுக்கு கடும் எதிர்ப்புகள் உள்ளன. இஸ்லாமிய கொள்கையை மக்களிடம் எடுத்துச்சொல்ல பலம் பொருந்தியவர்களை தந்தருள்வாயாக. உனக்கு பிரியமானவர்களில் அபூஜஹில் அல்லது உமர் இப்னு கத்தாப் ஆகிய இருவீரர்களில் ஒருவரைக் கொண்டு இஸ்லாத்தைப் பலப்படுத்துவாயாக”.
இவ்வாறு மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் நபிகளார்.
அதேநேரத்தில் நபிகளாருக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை குரைஷித் தலைவர்கள் தீட்டினார்கள். அவர்கள் தங்களுடன் இருந்த உமர் அவர்களை நபிகளாருக்கு எதிராக தூண்டிவிட்டார்கள். ‘முஹம்மது என்பவரின் தலையைக் கொய்து வாருங்கள், ஏழுவெள்ளை ஒட்டகங்களை பரிசாக தருகிறோம்’ என்று உசுப்பேற்றினார்கள்.
“அமைதியின் உருவமான, சாந்தமான ஒருவரை கொல்வதற்கு இத்தனை உயர்ந்த பரிசா?” என்ற உமர், ‘இதோ, உடனே அவர் தலையை கொய்துவருகிறேன்’ என்று புறப்பட்டு விட்டார்கள்.
வழியில் உமரை சந்தித்த ஒருவர், ‘உங்கள் தங்கை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த உமர் தன் தங்கை பாத்திமாவின் வீடு நோக்கிசென்றார்.
வீட்டுக்குள் இருந்த உமரின் தங்கை அப்போது திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்கொண்டு இருந்தார். இதை கேட்ட உமர் கோபத்துடன் வீட்டுக்குள் புகுந்து, தங்கையை கண்டித்தார்.
தங்கையோ தமயனின் அந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சவே இல்லை. ‘எங்கள் நாயகம் எங்களுக்கு நல்லவைகளை எடுத்துச் சொல்கிறார். நன்னடத்தையின் பக்கமும், நற்குணத்தின் பக்கமும் எங்களை வழிநடத்திச் செல் கிறார். எனவே அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை உமக்கு பயந்து விடுவதாயில்லை’ என்று தைரியமாக எதிர்க்குரல் எழுப்பினார்கள்.
தங்கையின் குரலில் இருந்த உண்மையும், தைரியமும் உமரின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘அப்படி உங்கள் முஹம்மது என்ன சொல்கிறார்?’ என்று வினவினார்கள். தங்கை பாத்திமா, திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டினார்.
“நபியே! நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்த குர்ஆனை நான் உங்கள் மீது இறக்கவில்லை. இறைவனுக்கு அஞ்சக்கூடிய இறையச்சம் உடையவர்களும் ஓர் நல் உபதேசமாகவே இதனை இறக்கி வைத்தோம். உயர்ந்த வானங்களையும் பரந்த பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது” (திருக்குர்ஆன் 20:2-4).
இந்த வசனத்தை தொடர்ந்து இஸ்லாமிய நன்னெறிகளைச் சொல்லும் பல திருக்குர்ஆன் வசனங்களை தன் தமயனுக்கு தொடர்ந்து ஓதிக்காட்டினார் பாத்திமா.
இதைக்கேட்டதும் உமர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
‘இது சத்தியம் நிறைந்த வார்த்தைகள். இது நிச்சயமாக இறைவனிடம் இருந்தே வந்திருக்க வேண்டும்’ என்று சொல்லிய உமர் கண்களில்இருந்து தாரை தாரையாக கண்ணீர்வழிந் தோடியது.
“இப்போதே பெருமானாரிடம் சென்று என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறேன்” என்று கூறியபடி மீண்டும் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.
உமர் உருவிய வாளுடன் வருவதை அறிந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஓடோடிச்சென்று “எம் பெருமானே, குரைஷித் தலைவர்களின் தூண்டுதலினால் உங்களை கொல்வதற்காக உருவிய வாளுடன் உமர் வந்து கொண்டிருக்கிறார்” என்று எச்சரித்தார், ஆனால் நடந்ததோ அல்லாஹ்வின் நாட்டப்படி வேறாக அமைந்தது.
உருவிய வாளுடன் வேகமாக வந்த உமர், நபிகளாரை நெருங்கி, “அண்ணலே! உங்களைப் பற்றிய தவறான தகவல்களே இதுவரை எனக்கு தரப்பட்டது. என் தங்கை ஓதிக்காட்டிய இறை வசனத்தின் உண்மைகள் என் இதயத்தை ஊடுருவி விட்டன. நிச்சயமாக அவை இறைவன் வாக்காகவே இருக்க முடியும். அதை எந்த ஒரு மனிதரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எனவே உங்களைப் பின்பற்றியவரோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்று நபிகளின் கரங் களைப்பற்றி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார். இதன் மூலம் நபிகளாரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மறுகணமே, “இந்த சத்திய மார்க்கம் இன்னும் ஏன் இருட்டிலே உலா வர வேண்டும். தோழர்களே உண்மையை பகிரங்கமாக எடுத்துச் சொல்லுங்கள். எதிர்ப்பவர்களுக்கு பதிலாய் நான் அமைவேன்” என்று வீரத்துடன் முழங்கினார் உமர் இப்னு கத்தாப் (ரலி).
வெட்டி வர அனுப்பிய உமர், வெற்றியின் பக்கம் இணைந்து விட்டாரே என்று குரைஷியர்கள் கவலை கொண்டார்கள். உமர் மூலம் ஏற்பட்ட பின்னடைவுக்கு பதிலாக மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில், உமர் மதம் மாறி விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல் அரபு கண்டத்தை ஆக்கிரமித்த போது, உமர் (ரலி) இவ்வாறு கூறினார்: “மதம் மாறவில்லை இந்த உமர், அறியா பாதையில் உழன்றுகொண்டிருந்த உமர் அறிவு ஞானத்தை தெரிந்து கொண்டார். ஓரிறையை ஏற்றுக்கொண்ட உமர் இறைத்தூதரையும் உண்மைப்படுத்தினார்”.
அன்று முதல் இஸ்லாம் பகிரங்கமாக பரவத்தொடங்கியது. சுபீட்சம் என்னும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை விரிக்கத் தொடங்கினான். இருண்ட அரபு கண்டத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது.
வான்மறையின் வசனங்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். வாழ்வில் அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டுவோம்.
மு.முஹம்மது யூசுப், உடன்குடி.

அல்லாஹ்வை மறுத்தவர்கள், எத்தனை படை, பலம், செல்வம் அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தாலும் அழிவு தான் அவர்கள் முடிவு என்ற படிப்பினைகளை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
“ஓ! மூஸா! உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை பிர் அவுன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே உங்கள் தாயை நோக்கி, ‘உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடுங்கள். அக்கடல் அதனை கரையில் சேர்த்து விடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக் கொள்வான்’ என்று உங்கள் தாய்க்கு அறிவித்தோம்”. (திருக்குர்ஆன் 20:39)
எகிப்து நாட்டில் பனிஇஸ்ரவேலர்கள் செல்வாக்கு அதிகமாக இருந்த காலம் அது. அப்போது, எகிப்தின் பூர்வீக குடிகளான கிப்திகள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் கிப்திகள் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். மேலும் அவர்களை பழிவாங்கும் வகையில் கொத்தடிமைகளாக நடத்தினார்கள்.
‘பிரவுன்’ என்ற பரம்பரை பெயரில் கிப்தி இனத்தினர் ஆட்சி செய்தார்கள். அந்த வரிசையில் 11-வது அரசனாக வந்தவன் தான் பிர் அவுன். ‘நானே கடவுள், மக்களை என்னையே வணங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டான். வேறுவழியின்றி மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
ஒரு நாள் அவன் ஒரு கனவு கண்டான். பாலஸ்தீனிலிருந்து ஒரு நெருப்புத் துண்டு பறந்து வந்து கிப்திகளைக் கொன்று பனி இஸ்ரவேலர்களை காப்பாற்றுவது போல அந்த கனவு அமைந் திருந்தது.
இந்த கனவு பிர் அவுன் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஜோதிடரிடம் அந்த கனவிற்கு விளக்கம் கேட்டபோது, ‘பனி இஸ்ரவேலர்கள் குலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது ஒட்டுமொத்த கிப்திகள் வம்சத்தையே அழித்து ஆட்சி அதி காரத்தை கைப்பற்றும்’ என்று கூறினார்.
மேலும், இனிமேல் பிறக்கின்ற அத்தனை ஆண் குழந்தை களையும் கொன்று விட்டால் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.
பிர் அவுன் சொன்னான், ‘இப்போது நம்மிடம் இருக்கும் கொத்தடிமைகள் பலர் ஐம்பது வயதை தாண்டியவர்கள். அப்படி நாம் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொல்வதாய் இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வேலை செய்வதற்கே ஆள் இல்லாமல் போய்விடுமே, என்ன செய்வது’ என்றான்.
அப்படியானால் ஓராண்டு விட்டு மறு ஆண்டு என்று கணக்கில் ஆண் பிள்ளை களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தார்கள். அரசாங்க அதிகாரம் கொண்ட பெண்களால் ஒவ்வொரு வீடும் கண்காணிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால் உடனே கொல்லப்படும். பெண் பிள்ளைகளுக்கு உயிர்பிச்சை வழங்கப்படும். ஆனால் மூஸாவின் தாயார் அவர்களை கருவுற்றிருந்த போது மற்ற பெண்கள் போல் அவர்களுக்கு வயிறு பெரிதாய் தெரியவில்லை. அதனால் தன் கர்ப்பத்தை அரசாங்க பெண்களிடம் இருந்து மறைத்துக் கொண்டார்கள். பிள்ளையையும் பெற்றெடுத் தார்கள்.
அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு மூலம் வழி சொன்னான். “அந்த பிள்ளையை ஒரு பேழையில் வைத்து நைல் நதியில் மிதக்க விட்டு விடு. அதனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் அல்லாஹ்.
பெற்ற பிள்ளையை நதியில் எறிவதா? எப்படி மனம் வரும். ஆனால் மூஸாவின் தாயார் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக உடனே அதனைச் செய்தார்கள். எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவன் நல்ல வழியைக் காட்டுவான் என்ற படிப்பினை இதில் புதைந்துள்ளது.
யார் எதிரியோ அந்த பிர் அவுனின் மனைவி ஆயிஷா அம்மையார் அரசியின் கைகளில் பேழை மிதந்து வந்து சேர்ந்தது. திறந்து பார்த்த அரசிக்கு ஆனந்தம். அதுவரை அவர்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை.
ஆயிஷா அம்மையார் ஓடோடி வந்து பிர் அவுனிடம் பேழையில் கண்டெடுத்த பிள்ளையை காட்டினார். ஆண் குழந்தையான இதை உடனே கொல்ல வேண்டும் என்றான் பிர் அவுன். ஆயிஷா அம்மையார் கெஞ்சினார். “நமக்கோ பிள்ளையில்லை. இது நமக்கு கண் குளிர்ச்சியாக இருக்கும். வெளியில் வளர்ந்தால் தானே எதிரியாய் மாறுவான். நம்மிடம் நம் அன்பின் அரவணைப்பில் நமக்கு நன்மை செய்யக் கூடிய பிள்ளையாக அல்லவா மாறி விடும். நமக்கும் ஒரு வாரிசு கிடைக்குமே?” என்றார்்.
அந்த வார்த்தைகள் பிர் அவுன் மனதில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ‘சரி வளர்த்துக் கொள்’ என்று அனுமதி அளித்தான்.
மூஸா அவர்கள் அரண்மனையில் வளர்ந்து வாலிபர் ஆனார்கள். ஒரு நாள் சண்டையை விலக்க முற்பட்டபோது எதிரி ஒருவன் முகத்தில் குத்தினார்கள். இதில் அவன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். அந்தக்காலத்தில் இதுபோன்ற கொலைக் குற்றம் செய்தவரை கல்லால் எறிந்து கொல்வது தண்டனையாக இருந்தது. எனவே அந்த தண்டனைக்குப் பயந்த மூஸா நபிகள் அந்த ஊரைவிட்டே ஓடி விட்டார்கள்.
மனம் போன போக்கில் நடந்தவர் பல நாட்கள் கடந்த பின்னர் மத்யன் என்ற ஊரை அடைந்தார். ஊரின் கடைக்கோடியில் கிணற்றில் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்பட்டுக் கொண்டிருந்த இரு பெண்களைக் கண்டார். அவர்களுக்கு தண்ணீர் இறைத்துக்கொடுத்து உதவினார். வீட்டிற்கு சென்ற பெண்கள் தன் வயோதிக தந்தையிடம் நடந்த விவரத்தை கூறினார்கள். தந்தையும் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். அவர்தான் மத்யன் நகரில் வாழ்ந்து வந்த சுஐப் நபியவர்கள்.
மூஸா நபியிடம் விவரங்களை கேட்டறிந்த சுஐப் நபிகள், “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்றார். அதோடு ஒரு நிபந்தனையும் விதித்தார்.
அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீங்கள் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதனை பத்து வருடங்களாக முழுமை செய்தால் அது நீங்கள் எனக்கு செய்யும் நன்றி தான்”. (திருக்குர்ஆன் 28:27)
மூஸா நபிகள் அந்த நிபந்தனையை நிறைவேற்றி, சாரா அம்மையாரை மணமுடித்தார்கள்.
இதற்கிடையில் ஏக இறைக்கொள்கையை ஏற்று பலர் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். அவர்களை கடுமையாக துன்புறுத்தினான் பிர் அவுன்.
அங்கிருந்து செல்ல இறை கட்டளை வந்தது. மூஸா நபிகள் தலைமையில் மக்கள் கூட்டமாக சென்றபோது வழியில் இருந்த கடல் இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது. அந்த மக்கள் அனைவரும் பத்திரமாக கரையேறினார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பிர் அவுன் மற்றும் அவனது படையினர் அனைவரும் கடலில் மூழ்கி பலியானார்கள்.
மூஸா நபி காலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன் காரூன்.அவனிடம் உன் செல்வங்களை ஏழைகளுக்கு ‘ஜகாத்’ கொடு என்ற போது, “மூஸாவே உம் இறைவனேயே நான் ஏற்கவில்லை. மேலும் இந்த செல்வங்கள் எல்லாம் என் அறிவாலும் திறமையாலும் சம்பாதித்தவை. உன் இறைவனின் பங்கு இதில் எங்கிருக்கிறது தரமுடியாது” என்றான்.
அதுமட்டுமில்லாமல் பணம் கொடுத்து ஒரு பெண்ணை தயார் செய்து அவள் மூலம் மூஸா மீது பாலியல் குற்றம் சுமத்தினான். ஆனால் சாட்சி சொல்ல வந்தபோது அந்தப்பெண் மூஸாவை பார்த்த உடனே மனம் மாறி உண்மையைச் சொன்னாள்.
மூஸா நபியை அழிக்க முயன்ற காரூன் மீது தண்டனை இறங்கியது. அவனையும் அவன் சேர்த்த செல்வங்களையும் பூமி விழுங்கியது.
அல்லாஹ்வை மறுத்தவர்கள், எத்தனை படை, பலம், செல்வம் அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தாலும் அழிவு தான் அவர்கள் முடிவு என்ற படிப்பினைகளை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மு. முஹம்மது யூசுப், உடன்குடி

என்றும் அழியாத இச்செல்வங்களே, நம் இறப்பிற்குப் பின்னும் நம்மைத் தொடரக் கூடியவை. இன்னும் நம்மைப் படைத்த இறைவனிடம் அளப்பரிய கூலியை நமக்குப் பெற்றுத் தருபவை, இன்ஷாஅல்லாஹ்.
உலகத்திலேயே பரம ஏழை யார் என்றால், பிறக்கும் குழந்தை என்று சொல்லலாம். இறந்த பின் மனிதர்களுக்குப் போர்த்துவதற்கு ஒரு துணியாவது கிடைக்கும். ஆனால் ஒட்டுத்துணியின்றி, ஒரு வாய் தண்ணீர், ஒரு கவளம் உணவிற்கு கூட நிச்சயமற்ற நிலையில் அடுத்தவரை எதிர்பார்த்து பிறக்கும் குழந்தையை, பரம ஏழை என்று சொல்வது மிகப்பொருத்தமாக இருக்கும்.
கருவறையில் இருக்கும் வரை உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்குப் பஞ்சமில்லை. உலகை எட்டிப்பார்த்தவுடன் தேவைக்கான முதல் முயற்சி அழுகையாக வெடிக்கிறது. பெற்றோரின் செல்வ நிலையைப் பொறுத்து குழந்தைகளின் தேவைகள் நிறைவேறுகின்றன.
வளர, வளர பொருட்களின் மீதான ஆசையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. உணவு, உடை, இருப்பிடம் என்று ஆசைகளின் எல்லை விரிந்து கொண்டே போகிறது. இல்லாத ஒன்று கிடைத்தவுடன், அடுத்தற்கு மனம் ஆசைப்படுகிறது.
அடுத்தடுத்து வாழ்க்கையின் உயரத்திற்கு செல்ல சிறகு முளைத்து ஆசை பறக்கிறது. அதிகம் ஆசைப்பட்டு, இருப்பதை இழப்பவர்களும் இருக்கிறார்கள். ‘போதும்’ என்ற தன்னிறைவு அடைபவர்களும் சொற்ப எண்ணிக்கையிலேனும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வயிறார உண்டதில்லை”.
மாநபி (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் வசதியான வாழ்க்கையுடன் மகிழ்ச்சியாக தங்கள் நாட்களைக் கழித்திருக்கலாம். ஆட்சி, அதிகாரம் அவர்கள் வசம் இருந்தும் அடுத்த வேளை உணவுக்காகக் கூட எதையும் சேமித்து வைத்திருக்கவில்லை.
இன்னும் ஸஹாபாக்களும், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அதிகாரத்தில் இருந்த கலீபாக்களும் கூட தங்களுக்காகவோ, தங்கள் சந்ததியினருக்காகவோ எதுவும் சேர்த்து வைக்காமல் இப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்துள்ளார்கள் என்பதை நாம் ஹதீதுகளில் இருந்தும், வரலாற்று நிகழ்வுகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால், நாம் எதிர்காலத்தைப் பற்றி வீணாகக்கவலைப்படுகிறோம். நமக்காகவும், நம் சந்ததியர்களுக்காகவும் சேர்த்து வைக்க ஆசைப்படுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் அவன் மூன்றாவதையும் தேடுவான்”.
இவ்வுலகில் என் வீடு, என் துணை, என் பிள்ளைகள், என் சம்பாத்தியம் என்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் நினைத்துக் கொள்கிறோம், வாய்க்கு வாய் சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால், நமக்கே நமக்கானது என்று இவ்வுலகில் எதுவுமில்லை என்பதை நாம் மறந்து விடுகிறோம். இன்னும், என்னுடைய உழைப்பு, என்னுடைய முயற்சி, அதனால் எனக்குக் கிடைத்த வெற்றி என்று, இறைவனின் அருட்கொடை நினைவிற்கு வரும் வரையில் மனம் மமதை கொள்கிறது. மனிதர்களின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.
உடல், உயிர் தந்தவன் அந்த வல்ல நாயனே. இன்னும் உறவுகள், செல்வம், ஆரோக்கியம் எல்லாமே அவன் நாடியிருக்காவிட்டால் நமக்கு கிடைத்திருக்காது என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஒருவர் மற்றவர்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய வாழ்வாதாரத்தை விரிவாக்கித் தர இறைவனை வேண்டலாம். திருமறையில் இறைவன் கூறுகிறான்: “உங்களுக்கு நாம் அளித்திருப்பதில் இருந்து (நல்ல வழியில்) செலவு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:254)
பொருட்செல்வம் தான் உயர்ந்த செல்வம் என்று நினைப்பவர்கள், பணம் படைத்தவர்களே செல்வாக்குடன் இருப்பதாகவும், சமுதாயம் அவர்களுக்கே மதிப்பும், மரியாதையும் தருவதாகவும் கருதுகிறார்கள். எனவே செல்வத்தைப் பெருக்குவதற்காக ஆலாய்ப் பறக்கிறார்கள். ஒருவர் எவ்வளவுதான் செல்வம் சேர்த்தாலும் அவர் உயிருடன் இருந்த போது செய்த நல்லறங்கள் மட்டுமே அவர் இறந்த பிறகு அவருடன் செல்லும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: “ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்”.
அத்தியாவசியமான தேவைகளுக்கு அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல், தேவையுள்ள மனிதர்களுக்கு தங்களால் முடிந்த சிறு, சிறு உதவிகளை செய்வதற்கு பொருளாதாரம் தேவைதான். அதற்காக பொருளீட்டுவதில் தவறொன்றும் இல்லை. தேவைக்கும் அதிகமாக பெரும் செல்வத்தை சேர்ப்பதால் பிரச்சினைகளும் அதிகமாகின்றன.
யாரெல்லாம் தம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து தங்கள் நிலைமை எவ்வளவோ மேல் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் தங்களைவிட மேலான நிலையில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, பொறாமையும் கொள்வதில்லை. தங்களுக்கு கிடைத்திருப்பவைகளைக் கொண்டு தங்களைப் படைத்த இறைவன் மீது திருப்தி கொள்கிறார்கள். குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் அன்புடன் நடந்து கொள்கின்றனர்.
‘ஆசையே எல்லாத் துன்பத்திற்கும் காரணம்’ என்றார் புத்தர். ஆனால் இன்று பல பேர் பேராசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதிக பணம், மற்றவர்களின் மீதான கருணையையும், இரக்கத்தையும் வற்றச் செய்துவிடும்.
தந்தை சேர்த்து வைத்துள்ள சொத்தின் மீது முழு உரிமையைக் கோருபவர்கள், அதன் காரணமாக கோபமும், பகை உணர்ச்சியும் கொண்டு ரத்த உறவுகளைத் துண்டித்து வாழ்கிறார்கள். லட்சங்கள், கோடிகள் செலவழித்து தங்கள் குடும்பத் திருமணத்தை நடத்துபவர்கள், சாப்பாடும், தண்ணீரும் வீணாகப் போவதைப் பற்றி யோசிக்காதவர்கள், திருமண உதவி கேட்டு வரும் ஏழைகளுக்கு கொடுப்பதற்கு ரொம்பவே யோசித்து ஐநூறு, ஆயிரம் என்று கொடுப்பதைப் பார்க்கிறோம்.
பணத்தின் மீதான பேராசையால் மதியிழந்து கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடிய மனிதர்களைப் பற்றிய செய்திகளை அடிக்கடி செய்தித் தாள்களில் வாசிக்கிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள், பெண்கள் என்று விதி விலக்கில்லாமல் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பணத்தின் மீது ஏற்படும் பேராசை பொறாமையை உள்ளத்தில் உருவாக்கி விடுகிறது. நல்லெண்ணங்களை மறையச் செய்து விடுகிறது. நன்றாக வாழ்பவர்களைப் பார்த்து காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்பையும் தூண்டி விடுகிறது.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்பதை சித்தாந்தமாகக் கொண்டவர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. உயர்ந்த பண்புகள், நமக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடிய உறவினர்கள், நண்பர்கள், கர்வம் தராத கல்வி, ஒழுக்கமான குழந்தைகள் ஆகியவையே உயர்ந்த செல்வமாகப் போற்றத்தகுந்தது.
என்றும் அழியாத இச்செல்வங்களே, நம் இறப்பிற்குப் பின்னும் நம்மைத் தொடரக் கூடியவை. இன்னும் நம்மைப் படைத்த இறைவனிடம் அளப்பரிய கூலியை நமக்குப் பெற்றுத் தருபவை, இன்ஷாஅல்லாஹ்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84.

“என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதைக் கண்டேன்” (முஸ்லிம்)
சாலைகளில் அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் எரிச்சலை ஏற்படுத்தும் எச்சில். கண்ட இடத்தில் காறித்துப்பும் கேவலமான கலாசாரம் காலரா நோயைவிட வேகமாக மக்களிடையே பரவி நிற்கிறது. யாரைக்குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை. சமூகப் பொறுப்புணர்வு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் குறைந்துகொண்டே வருகின்றது. இதில் படித்தவர் படிக்காதவர் என்று வேறுபாடுகள் எதுவும் கிடையாது.
“ஒரு தினத்தின் அழகிய செயலைச்செய்பவர் யார் எனில்; தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சமூகப்பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. உண்மையில் எச்சில் குறித்து பேசுவது ஓர் அருவருப்பான விஷயம். ஆயினும் பேசியே ஆகவேண்டிய விவகாரம். சர்வ சாதாரணமாக நாம் காறி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறோம். ஏனையோருக்கு அது எவ்வளவு தூரம் இடைஞ்சலைத் தரும் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை.
ஓரமாகவும் பிறருக்கு இடைஞ்சல் இல்லாமலும் எச்சில் துப்புவது மார்க்க கடமை என்று கூறவரவில்லை. மாறாக, சமூகப்பொறுப்புணர்வு.
சமூகப் பொறுப்புணர்வு என்பது எச்சில் துப்புவதில் இருந்து தொடங்குகிறது என்பதை நம்மில் அனேகமானவர்கள் உணர்வதும் இல்லை. அடுத்தவருக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்க இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்கவியல், மிகச்சிறந்த பண்பாடு. இந்தப் பண்பாட்டுப் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர்களாகவே நமது முன்னோர்கள் இருந்துள்ளனர். ஆனால் நாம்தான் அதனைத் தவறவிட்டுவிட்டோம்.
ஆம், சர்வசாதாரணமாக நாம் துப்பும் எச்சில் ஏனையோருக்கும் தொந்தரவு தருமே என்பது குறித்தெல்லாம் இங்கே கவலைப்படுவதற்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அது குறித்து உபதேசித்தால்கூட வேற்றுக்கிரகவாசியைப் போன்று ஒருவித விநோதப் பார்வை பார்க்கின்றார்கள்.
மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளிலும் வீதிகளிலும் துப்பும் எச்சில் சிலபோது எரிச்சலை ஏற்படுத்துகின்றது. சேரிகளைக் குறித்து நாம் இங்கே பேசவில்லை. படித்த, நாகரிகம் அறிந்த பண்பட்ட மனிதர்களில் சிலர் பொதுஇடங்களில் நடந்துகொள்ளும் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளைக் குறித்து சொல்லவே வேண்டாம். அந்தப் பகுதிகளில் அண்ணலாரின் இந்த நபிமொழி காற்றில் பறப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவில் பள்ளிவாசலுக்கு அருகே எச்சில் துப்பினார்கள். ஆனால் அதனை மண்போட்டு மூட மறந்த நிலையில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டுக்குச் சென்றபின்னரே பெருமானாருக்கு அது குறித்து நினைவுக்கு வந்தது. உடனே ஒரு நெருப்புப் பந்தத்தை எடுத்தவாறு வீட்டைவிட்டு வேகமாக வெளியேறி பள்ளிவாசலுக்கு அருகே வந்து எச்சிலைத் தேடினார்கள். கண்டுபிடித்து அதனை மண்போட்டு மூடினார்கள். பின்னர் இவ்வாறு கூறினார்கள்: “இன்று இரவு என் வினைப்பட்டியலில் ஒரு குற்றச்செயல் பதிவு செய்யப்படுவதில் இருந்து என்னைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” (பத்ஹுல் பாரி)
இந்த ஒரு சிறிய செயலின் மூலம் எவ்வளவு பெரிய சமூகப்பொறுப்புணர்வை நபி (ஸல்) அவர்கள் இங்கே வெளிப் படுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.
பொது இடங்களில் குப்பை கொட்டினாலோ எச்சில் துப்பினாலோ அபராதம் விதிக்கும் சட்டம் உள்ளது. நல்ல விஷயம்தான். ஆயினும் இதனை அமல்படுத்துவது யார்..? உத்தரவை மீறுவோரை யார் கண்டுபிடிப்பது? யார் நட வடிக்கை எடுப்பது? எதுவும் தெரியவில்லை.
விதிமீறலைக் கண்காணிப்பது சாத்தியமா? அபராதம் செலுத்தாவிட்டால் என்ன தண்டனை? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் இயல்பாகவே எழுகிறது.
சட்டங்களால் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்ற சிந்தனையும் எழுகிறது. சட்டங்களால் முடியுமோ முடியாதோ, ஆனால் சுயக் கட்டுப்பாடுகள் மூலமாக நிச்சயம் இதனை கட்டுப்படுத்தலாம்.
ஆம், சமூகப்பொறுப்புணர்வுடன் ஒவ்வொருவரும் நடந்துகொண்டாலே போதும். இந்த சமூகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை என்பதை உணர்ந்து நடந்துகொண்டாலே போதும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆகவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் இந்தச் சுயக்கட்டுப்பாடு கடமையாகிறது.
நான் ஒரு சாதாரணமானவன் தானே. எனவே எனக்கு இந்த சமூகத்தில் எந்த பொறுப்பும் இல்லை என்று யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே.
கவனமில்லாமல் துப்பினால் அது அடுத்தவருக்குத் தொந்தரவு தரும் என்பது மட்டுமல்ல, சிலபோது அச்செயல் கொலையிலும் முடியும். பேருந்தில் எச்சில் துப்பிய மனிதர் கொலை செய்யப்பட்ட சம்பவம்கூட உண்மையில் நடந்துள்ளது. ‘கவனிக்கவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது’ என்று எச்சில் துப்பியவர் கூறியபோதும் அவரது பேச்சைக் காதுகொடுத்து கேட்கும் மனோ நிலையில் பாதிக்கப்பட்டவர் இருக்கவில்லை. இறுதியில் வாய் தகராறு கொலையில் முடிந்தது. ஏனெனில், ‘துப்பினால் நீ அடுத்தவரைக் கவனித்திருக்க வேண்டும்’ என்பது தான் அங்கு வாதம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதைக் கண்டேன்” (முஸ்லிம்)
இம்மை வாழ்வின் நோய் தொற்றுக்கு மட்டுமல்ல, மாறாக மறுமை வாழ்வின் மகத்தான வெற்றிக்கும்கூட சர்வ சாதாரணமாக நாம் துப்பும் இந்த எச்சிலும் சிலபோது முக்கியத் தடையாக அமைந்துவிடுமோ என்பதை எண்ணும்போது ஒருவித அச்சம் ஏற்படுகிறது.
தோற்றத்தாலோ, ஆடையாலோ, மொழியாலோ அல்லது செய்யும் தொழிலாலோ பண்பட்ட மனிதராக ஒருவர் மாறுவதில்லை. மாறாக சமூகப்பொறுப்புடன் கூடிய செயல்களின் மூலமாகவே ஒருவர் நல்லவராக அடையாளம் காணப்படுகின்றார்.
அடுத்தவருக்கு தொந்தரவு தராமல், எரிச்சலை ஏற்படுத்தாமல் கவனத்துடன் எச்சில் துப்புவதும் ஒருவகை சமூகப்பொறுப்புணர்வே.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

திருக்குர்ஆனின் மூன்றாம் அத்தியாயமான, ஆலஇம்ரானில், மர்யம் (அலை) அவர்களின் பிறப்பு வரலாற்றை விரிவாக சொல்கிறான், அல்லாஹ்.

இம்ரானின் மனைவி ஹன்னா ஆண் குழந்தை பெறும் ஆசையில் அல்லாஹ்விடம் ஒரு நேர்ச்சை செய்தார். ‘நான் கர்ப்பமுற்றிருக்கும் இந்த பிள்ளையை அல்லாஹ்விற்காக நான் அர்ப்பணம் செய்து விடுவேன்’ என்று. ஆனால் அவள் பெற்றெடுத்ததோ பெண் குழந்தை.
“அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்’ என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு “மர்யம்” எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி (ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக் கின்றேன்!’ என்றார்” (திருக்குர்ஆன் 3:36)
அந்த தாயின் விருப்பம் ஒன்றாக இருந்தாலும் அல்லாஹ்வின் விருப்பம் வேறாக இருந்தது. ஆண் பிள்ளையை விட இந்த பெண் குழந்தைக்கு அல்லாஹ் அதிக கண்ணியத்தையும் அந்தஸ்தை கொடுத்திருந்தான்.
எந்தவித ஆணின் தொடர்பும் இன்றி அல்லாஹ்வுடைய ரூகானியத்தை (உயிர் மூச்சை) மர்யமின் கர்ப்பப்பையில் ஊதினான். அதன் மூலம் ஈஸா மஸீஹ் என்ற இறைத்தூதரை பிறப்பிக்கச் செய்தான்.
ஆதி பிதா ஆதம் நபிகளை களிமண்ணால் படைத்து ரூஹை ஊதியது போல், ஈஸா நபியையும் ரூஹால் ஊதி படைத்தான். அத்தகைய சிறப்பை மர்யம் (அலை) அவர்கள் பெற்றது அவர்களுக்கு கிடைத்த மாபெரும் கண்ணியம். அல்லாஹ் நாடினால் எதையுமே “குன்” என்ற வார்த்தை சொன்னால் போதும் அது உருவாகி விடும். இதுதான், இப்படித்தான் என்ற உலக நியதிகளோ, காரண காரியங்களோ அவனுக்குத் தேவை யில்லை.
பாலஸ்தீனத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் என்ற இறை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட மர்யம் (அலை) அவர்கள், சிறுமியாக இருந்த காரணத்தால் அவர்களை வளர்க்கின்ற பொறுப்பை யார் ஏற்பது என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது பனி இஸ்ரவேலர்கள் வாழ்வில் இருந்த பழக்க முறையான எழுதுகோல்களை ஆற்றில் எறிந்து முடிவு செய்ய எண்ணினர்.
அதன் அடிப்படையில் அப்போது பைத்துல் முகத்தஸ் ஆலயத்தின் தலைமை இமாமாக இருந்த நபி ஜக்கரியா (அலை) அவர்கள் அந்த பொறுப்பை ஏற்க முடிவு செய்யப்பட்டது. அவர்களின் அன்பின் அரவணைப்பில் மர்யம் (அலை) அவர்கள் வளர்ந்து வந்தார்கள்.
“ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும் அழகாகவும் அதனை வளரச் செய்து, அதனை வளர்க்க ஜக்கரிய்யா பொறுப்பேற்று கொள்ளுமாறும் செய்தான். ஜக்கரிய்யா அந்த பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம் அவளிடத்தில் ஏதேனும் உணவு பொருள் இருப்பதை கண்டு ‘மர்யமே, இது உனக்கு ஏது? எங்கிருந்து வந்தது’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘இது அல்லாஹ்விடமிருந்து தான் வருகிறது. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 3:37)
ஜக்கரிய்யா நபிகள் அருமை குழந்தை மர்யம் (அலை) அவர்களை காணச்செல்லும் போதெல்லாம் அவள் இருப்பிடத்தில் உணவும் பல வகையான கனிகளும் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் மேலோங்கியவராக வினவினார்.
“மர்யமே! நீயோ உன் புனிதத்தன்மையை காப்பதற்காக மறைவான மாடத்தில் வசிக்கிறாய். வெளியே சென்று கனிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் நான் உன்னை காண வரும் போதெல்லாம் உன்னிடம் அந்த காலகட்டத்தில் விளைச்சல் இல்லாத, இந்த பாலைவனத்தில் விளையவே முடியாத அபூர்வ கனிவர்க்கங்கள் இருக்கின்றனவே. இதன் உண்மைத் தன்மை என்ன” என்றார்.
“என் இறைவன் எல்லாவற்றுக்கும் ஆற்றலுடையவன். அவன் நாடினால் எதையும் தருவதற்கு எந்த தடையும் அவனுக்கு இல்லை. நம் தேவைக்காக கையேந்தினால் மறுகணம் அது நிகழ்ந்து விடுமே” என்று மர்யம் (அலை) பதிலுரைத்தார்கள்.
இந்த பதில் ஜக்கரிய்யா (அலை) மனதில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘இத்தனை ஆண்டு காலம் நபியாய் இருந்து அல்லாஹ்வின் ஏகத்துவத்தை எடுத்தியம்பிக் கொண்டிருக் கிறேன். பனி இஸ்ரவேலர்களில் மிக சொற்பத் தொகையினரே அதனை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கோ வயது முதிர்ந்து விட்டது. என்னைத் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்வதற்கு எனக்கென ஒரு சந்ததி இல்லை. நானும் முதியவன். என் மனைவியும் மலடு. எங்களுக்கு இனி எங்கே பிள்ளைப் பிறக்கப் போகிறது என்ற சந்தேகத்தில் வீணே நாட்களைக் கடத்தி விட்டேன். அல்லாஹ்விடம் மன்றாடி கேட்டால் அத்தனையும் கிடைக்கும் என்ற ஞானம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. மர்யமிற்கு அளித்த இந்த பாக்கியத்தை எனக்கும் வழங்க அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்’, என்று எண்ணிவர்களாக இருகரம் ஏந்துகின்றார்கள்.
“என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு நல்ல சந்ததியை அளிப்பாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 3:38)
அல்லாஹ் அவர்களுடைய துஆவை எந்தவித நிபந்தனையுமின்றி உடனே ஏற்றுக் கொண்டான்.
“ஆகவே அவர் மாடத்தில் (மிஹ்ராப்) நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் அவரை நோக்கி மலக்குகள் சப்தமிட்டு கூறினார்கள். ஜக்கரிய்யாவே! நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா என்ற ஒரு மகவை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான்”. (திருக்குர்ஆன் 3:39)
யஹ்யா என்று பெயரிடப்பட்ட ஒருவரையே அவருக்கு வாரிசாகவும், ஒரு நபியாகவும் அளித்து அருட்கிருபை செய்தான் அல்லாஹ்.
இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம், உறுதியான நம்பிக்கையோடு எந்த ஒரு பிரார்த்தனையையும் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கும் போது, அது ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு எந்த தடையும் இருக்காது என்பது தான்.
இதே போன்ற நிகழ்வு ஒன்று இப்ராகிம் நபிகளின் வாழ்விலும் நடந்தேறியது. ஒரு காலகட்டத்தில் லூத் நபியின் கூட்டத்தார் மானக்கேடான செயலில் ஈடுபட்டு வந்தனர். லூத் நபியின் எந்த போதனையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. எனவே அந்த கூட்டத்தாரை அழிப்பதற்கான ஆணை அல்லாஹ்விடமிருந்து பிறப்பிக்கப்பட்டது. அதனை நிகழ்த்தி காட்டும் மலக்குகள் லூத் நபியின் கூட்டத்தார் வசித்து வந்த பகுதிக்கு அருகாமையில் வாழ்ந்து வந்த இப்ராகிம் நபிகளைச் சந்தித்து விவரம் சொல்ல அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான். அதோடு இப்ராகிம் நபிகளுக்கும் ஒரு நற்செய்தியைச் சொல்லி அனுப்பினான்.
“அதே சமயத்தில் அவருக்கு ‘இஸ்ஹாக்’ என்னும் மகனைப் பற்றியும் இஸ்ஹாக்கிற்கும் பின்னர் ‘யாகூப்’ என்னும் பேரன் பிறக்கப் போவதைப்பற்றியும் நற்செய்தி கூறச் செய்தோம்.” (திருக்குர்ஆன் 11:71)
அந்த செய்தி கேட்ட இப்ராகிம் நபியின் மனைவி சாரா அதிர்ச்சி அடைந்தார்.
“மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும், என்னுடைய கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் கர்ப்பமாகி பிள்ளை பெறுவேனா. நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்” என்றாள். (திருக்குர்ஆன் 11:72)
பேதைப்பெண்ணே! அல்லாஹ்வின் அருட்கிருபையில் நிராசையாகி விடாதே என்ற மலக்குகள், “அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய பாக்கியங்களும் இப்ராகிமுடைய இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமையுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 11:73)
எனவே அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு ஜக்கரிய்யா நபியவர்கள் கேட்ட அந்த துஆவை கேட்டு வந்தால், கர்ப்பம் கொள்ள எந்த ஒரு அனுகூலமும் இல்லாத ஒருவருக்கு கூட அல்லாஹ்வின் கிருபையால் பிள்ளைப் பேறு கிட்ட நிச்சயமாக வழிபிறக்கும். இது பலரின் வாழ்வில் உணர்த்தப்பட்ட உண்மை.
இப்ராகிம் நபிகளுக்கு அன்னை சாரா மூலம் இஸ்ஹாக், யாகூப் நபிமார்களால் தொடர்ந்து, அன்னை ஹாஜரா மூலம் இஸ்மாயில் என்ற நபியையும் அல்லாஹ் அருளினான் என்பது அருள்மறையில் பதிவு செய்யப்பட்ட வசனம்.
இல்லாததிலிருந்து எதையும் தருவதற்கு இறைவன் ஆற்றலுடையவன். நம் நம்பிக்கையும் பிரார்த்தனையுமே அதனை நடத்தி காட்டும் சக்தி கொண்டது.
மு. முஹம்மது யூசுப், உடன்குடி.

தன்னை அழிக்க நினைத்தவர்களையும், தன் அன்பு பார்வையால் மன்னித்து, அவர்களையும், இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்த பெருமை, நபி (ஸல்) அவர்களைச் சாரும்.
இறைவனை மறந்து, மானுடமே மனநிலை சரியில்லாத நிலையில் பாதை மாறியபோது, முகம்மது நபி (ஸல்) அவர்களின் மூலம் இஸ்லாம் என்ற மார்க்கத்தை, மக்களிடம் கொண்டு செல்கிறான் இறைவன்.
நபி (ஸல்) அவர்களும் தனக்கு இறைவன் ‘வஹி’ மூலம் அறிவித்த இறைச்செய்தியை மக்களிடம் எடுத்துக் கூறினார்கள். ஆனால், அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்த மக்காவாசிகள், நபிகளாருக்கு பல இன்னல்கள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களையும் மற்றும் இஸ்லாமை தன் வாழ்நெறிக்கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்களையும், அபு சுப்யான், ஹாரிஸ் பின் ஹிஸாம், இத்தாப் இப்னு உசைத் போன்றவர்கள் பல கொடுமைக்கு உட்படுத்தினார்கள். நபிகளார் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது தங்களின் வெறுப்பு தீயை அள்ளி வீசி, மக்காவை விட்டு வெளி ஏற்றினார்கள்.
பொது மன்னிப்பு
காலம் கனிந்து, அல்லாஹ்வின் உதவியால், நபி (ஸல்) அவர்கள், மக்காவை வெற்றிபெற்று, மக்காவின் மன்னராக மகுடம் சூட்டப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வெற்றிச்செய்தி, எதிரிகளின் காதில் தீயில் காய்ந்த எண்ணெய்யாக விழுந்தது. நாம் முகம்மதுக்கும், அவரின் தோழர்களுக்கும் செய்த இன்னல் களுக்கு நிச்சயம் பழி தீர்க்கப்படுவோம் என்று அஞ்சி நடுங்கினார்கள்.
ஆனால், மன்னிப்பை விரும்பும் நபி (ஸல்) அவர்கள், முஸ்லிம் களுக்கு எதிராக யாரெல்லாம் கொடுமைகளை கொப்பளித்தார்களோ அவர்கள் மீது, குற்றப்பத்திரிகை, தாக்கல் செய்யப்பட மாட்டாது. அவர்கள் அனைவரும் விடுதலை பெற்று விட்டார்கள் என்று கூறி பொது மன்னிப்பை வழங்கி னார்கள்.
தனக்கு எதிராகப் பல வகையில் கொடுமை செய்தவர்களைத் தண்டிக்கும் அனைத்து அதிகாரமும் பெற்றிருந்தும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியது நபிகளாரின் சிறந்த ஆளுமைக்கு அழகைக் கூட்டியது.
மன்னிப்பின் எல்லைக்குச் சென்ற நபிகளார்
முஸ்லிம்கள் அதிகம் கண்ணியம் கொடுக்கும் ஒரு இடமாகப் பள்ளிவாசல் இருக்கின்றது. அந்தப் பள்ளிவாசல்களில் சிறுதுரும்பு கிடந்தாலும், அதனை உடனே அகற்றி பள்ளிவாசலை சுத்தமாக வைத்து இருக்க ஆசைப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட பள்ளிவாசலை அசிங்கம் செய்த நபரை நபி (ஸல்) அவர்கள் மன்னித்து அனுப்பிய நிகழ்வு, மன்னிக்கும் தன்மைக்கு முன்னுதாரணமாக அமைந்தது. இதுகுறித்து நபித் தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறியிருப் பதாவது:
“ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் அசுத்தம் செய்து விட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் கொதித் தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரை விட்டுவிடுங்கள்; அவர் அசுத்தம் செய்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். (நூல்: புகாரி).
தீங்கிழைப்போருக்கும், நன்மை செய்யும் பண்புதான் இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் போதனை செய்கிறது. அதனை தன் வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்திலும் நபிகளார் வெளிப்படுத்தினார்கள்.
“நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.” (திருக்குர்ஆன் 23:96)
அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கும், உலக மக்களுக்கும் திருக்குர்ஆனில் பல பாடங்கள் கற்றுக்கொடுக்கின்றான். திருக்குர்ஆனின் வழிகாட்டலால் தானும், தன்னைச் சார்ந்தவர்களையும், நபி (ஸல்) வழிநடத்திச் சென்றார்கள்.
“நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர் களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப் படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப் படாது”. (திருக்குர்ஆன் 41:34,35)
கொள்கை எதிரிகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களிட மிருந்து ஏற்படக்கூடிய இடைஞ்சல் களையும், இன்னல்களையும் மறுமை வாழ்க்கைக்காகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையால் சத்தியக்கொள்கையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.
தன்னை அழிக்க நினைத்தவர்களையும், தன் அன்பு பார்வையால் மன்னித்து, அவர்களையும், இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்த பெருமை, நபி (ஸல்) அவர்களைச் சாரும். தன் வாழ்நாள் முழுவதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதை மகிழ்ச்சியாய் செய்து வந்தார்கள்.
நபிகள் நாயகத்தின், மன்னிக்கும் தன்மைக்கு ஏராளமான சான்றுகளைக் பட்டியலிடலாம். மக்கா வெற்றியின் போது, எதிரிகள் அனைவரையும் மன்னித்தார்கள். தன்னை பைத்தியம் என்றும், சூனியக்காரர் என்றும், சந்ததியற்றவர் என்றும் பழித்தவர்களை எல்லாம் மன்னித்தார்கள். தன் மீது குப்பை கொட்டியவர்களை அரவணைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் செல்லும் பாதையில் முட்களை பரப்பியவர்களை அன்பு முகத்தோடு பார்த்தார்கள். நபிகளாரின் இத்தகைய மன்னிக்கும் மனப்பான்மை காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக, நபிகளாரை பின்பற்றி தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார்கள். இஸ்லாம் மாபெரும் மார்க்கமாக உலகம் முழுவதும் வளர்ந்தது.
-ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

அறியாமை, மூட பழக்க வழக்கங்கள், தவறான நம்பிக்கைகள் போன்றவற்றை அகற்றி இறைவன் வகுத்த வழியில் நாம் அனைவரும் வாழ இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக திகழ்கிறது.
“நபியே! நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம். ஆகவே அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக நீர் உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுத்து வருவீராக. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்” (திருக்குர்ஆன் 108:1-3)
கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தது முதல் தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு பாவச்செயல்களிலும் ஈடுபட்டதே இல்லை. 40-வது வயதில் அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்தது. அந்த 40 ஆண்டு கால வாழ்க்கை, அவர்களின் நல்லொழுக்கத்தை எடுத்துக்காட்டும் சிறந்த வாழ்க்கையாக அமைந்திருந்தது.
அரபு தேசத்தில் கரடு முரடான குணங்கள் கொண்ட மக்கள் வாழ்ந்த காலத்தில், நபிகளாரின் அமைதியான தோற்றமும், அன்பான பேச்சும் அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிறரின் நலனுக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்ட எத்தனையோ நிகழ்வுகள் நபிகளார் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.
இளமை காலத்திலேயே ‘அல் அமீன்’ (நம்பிக்கையாளர்) என்ற அடைமொழியிலேயே நபிகள் நாயகம் அழைக்கப்பட்டார்கள். அத்தனை அரேபியரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொறுப்பை (அமானிதம்) அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தான் ஒப்படைத்திருந்தனர். அந்த அளவிற்கு அவர்கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
தங்கள் சொந்தங்களையே பாதிப்பதாய் இருந்தாலும் உண்மையை எடுத்துச்சொல்வதில் ஒருபோதும் நபிகளார் தயங்கியது இல்லை. இதை அத்தனை அரபு மக்களும் அறிந்திருந்தனர். அதனால் தான் நபிகளார் மீது அரபு மக்கள் அன்பும் பாசமும் கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் மேலாக நபிகளார் மீது பயம் கலந்த மரியாதையும் அந்தக்கால மக்கள் வைத்திருந்தனர்.
நபிப்பட்டம் பெற்ற பிறகு இறைவனின் வசனங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது, அதை ஏற்க அந்த மக்கள் தயங்கினார்கள், மறுத்தார்கள். நபிகளாரை எதிர்க்கவும் துணிந்தனர்.
தங்களது சுகபோக வாழ்க்கை முறையை கண்டிக்கும் வகையில் இறைவசனங்கள் இருந்த தால் அரபு மக்கள் அதை ஏற்க மறுத்தனர். மேலும், அந்த இறை வசனங்களை எடுத்துக் கூறிய நபிகளா ரையும் வெறுத்து ஒதுக்கவும் முன்வந்தனர். எந்த மக்கள் தன்னை கொண்டாடினார் களோ, அந்த மக்களே தன்னை வெறுத்து ஒதுக்கும் தலைகீழான நிலைமையையும் நபிகளார் சந்தித்தார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் இளமைப் பருவத்தில் இருந்தே அறிவிலும் ஆற்றலிலும் திறம் பல பெற்றிருந்தார்கள். அறிவு நுட்பத்தோடு, அதே சமயம் நியாய உணர்வோடு அவர்கள் செய்த வியாபாரம் அரபு தேசத்தில் அவர்களுக்கு தனி அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.
அந்த காலகட்டத்தில் மக்காவில் பெரும் வியாபார சீமாட்டியாக விளங்கிய அன்னை கதீஜா, நபிகள் பெருமானின் குணநலன்கள், வியா பாரத் திறன்கள் பற்றி அறிந் தார்கள். தன் தோழியர் மூலம் செய்தி அனுப்பி, வியாபாரத்தில் தனக்கு உதவுமாறு நபிகளாரைக் கேட்டுக்கொண்டார்கள்.
அன்னையின் அன்பிற்கு மரியாதை கொடுத்து அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஒரு முறை நிறைந்த வியாபார பொருட்களுடன் சிரியா சென்று நல்லதொரு லாபத்தை ஈட்டி வந்தார்கள்.
அருமை நாயகத்தின் அருங்குணங் களை அறிந்த அன்னை கதீஜா, நாயகம் அவர்களைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார்கள். நபிகளாரும் ஏற்றுக்கொள்ளவே, திருமணமும் நல்லபடியாக நடந்தது.
அன்னை கதீஜா, நபிகள் நாயகத்தை விட வயதில் மூத்தவர், கணவனை இழந்த கைம்பெண். இருந்தாலும், அவர்கள் இருவரும் எந்த வித வேறு பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இல்லறத்தை நல்லறமாய் பேணிக்காத்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரின் வாரிசாக காஸிம் (ரலி), அப்துல்லா (ரலி) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளும், ஜைனப் (ரலி), ருக்கையா (ரலி), உம்மு ஹூல்ஸும் (ரலி), பாத்திமா (ரலி) ஆகிய பெண் குழந்தைகளும் பிறந்தார்கள்.
இதில், பெண் குழந்தைகள் மட்டுமே நீண்ட காலம் உயிருடன் வாழ்ந்தனர். ஆண் குழந்தைகள் இரண்டும் சிறுவயதிலேயே காலமாகி விட்டனர்.
அன்னை கதீஜா மறைவிற்குப் பிறகு மரியா பின்து ஷம்ஊன் (ரலி) அவர்களை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராகிம் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை மீது அண்ணல் எம்பெருமானார் (ஸல்) மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.
ஆனால், இளவயதிலேயே மகன் இப்ராகிம் மரணமடைந்தார். இந்த செய்தி கேட்டு பெருமானார் (ஸல்) நிலைகுலைந்து போனார்கள். எத்தனையோ சோகங்களிலும் அழுது அறியாத அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.
அப்போது தற்செயலாக சந்திர கிரகணம் ஏற்பட்டது. உடனே சில சஹாபாக்கள் ‘நபிகளின் மகன் மரணித்து விட்ட காரணத்தினால் தான் சந்திர கிரகணம் ஏற்பட்டுவிட்டது’ என்ற செய்தியை மக்களிடையே பரப்பினார்கள்.
இந்த செய்தியைக் கேள்வியுற்ற கண்மணி நாயகம், தன் துக்கத்தையும் மறந்து எல்லா தோழர்களையும் மதினாவில் உள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதுன் நபவியில் ஒன்று கூட்டி இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள்:
“அல்லாஹ் நிகழ்த்தி காட்டும் இயற்கை நிகழ்வுகள்தான் சூரிய, சந்திர கிரகணங்கள். அவைகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி, அது அதற்கென வரையறுக்கப்பட்டுள்ள வட்ட வரைக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றன. அவைகள் எப்போதாவது ஒரு நேர்கோட்டில் வரும் போது இது போன்ற கிரகணங்கள் ஏற்படுவது இறைவனின் கட்டளை. இயற்கையின் நியதி. சூரா யாஸின் இன்னும் பல இடங்களில் இதனை அல்லாஹ் வசனமாய் அமைத்திருப்பதை நான் உங்களுக்கு ஓதிகாட்டவில்லையா? அப்படிப் பட்ட இயற்கை நிகழ்வுகளுக்கு, யாராயிருந்தாலும் அவர்களின் பிறப்போ, இறப்போ காரணமாக இருக்க முடியாது. அறியாமை காலத்தில் இருந்தது போல நீங்கள் இன்னும் மூட நம்பிக்கையை நம்பி பகுத்தறிவை மறுக்க எத்தனிக்கிறீர்களா?, இது அறியாமை. எனது மகன் இப்ராகிம் இறப்பிற்கும் இந்த கிரகணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்றார்கள்.
தான் துக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களின் மூட நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டும் என்பதில் மிக்க கவலை கொண்டிருந்தார்கள் நபிகள் நாயகம்.
இதே சம்பவத்தைப் பயன்படுத்தி அபூஸூபியானும் அவனைச் சார்ந்த குரைஷி குலத்தின் எதிரிகளும், “இதோ இந்த முகம் மதுக்கு வாரிசே இல்லாமல் போய் விட்டது. இவர் என்னவோ தன்னை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்று ஏளனம் செய்தனர். அரேபியரிடையே ஆண் வாரிசு என்பது அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது.
உடனே அல்லாஹ் மேலே சொன்ன வசனத்தை இறக்கி “நபியே! உங்கள் எதிரிகள் தான் சந்ததியற்றவர்கள். உங்களுக்கு சொர்க்கத்தில் கவ்ஸர் என்ற தடாகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். அதற்கு நீங்கள் நன்றி செலுத்தி குர்பானி கொடுங்கள்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னான்.
திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய மார்க்க அறிஞர்கள் சிலர் குறிப்பிடும் போது, ‘நபிகளுக்கு வாரிசு ஏற்படுத்தலாகாது என்ற எண்ணத்தில் தான் அல்லாஹ் அவர்களுக்கு ஆண் வாரிசை கொடுத்தும் அதை எடுத்துக்கொண்டானோ? அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான். அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் நபித்துவம் இல்லவே இல்லை என்பதின் அடையாளமாக கூட இது இருக்கலாம்’ என்று விளக்கம் அளிக்கிறார்கள்.